சின்னத்திரை நடிகர்களான ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவருக்குமான சண்டை மீண்டும் பொதுவெளியில் வலுக்க தொடங்கியுள்ளது.


கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை, ஆஃபீஸ், ராஜா ராணி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர்  ஈஸ்வர். இவர் சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஜெயஸ்ரீ ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை பூதகரமாக வெடித்தது.ஈஸ்வர் மகாலட்சுமி என்னும் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் தனது குழந்தை முன்பு தகாத முறையில் நடந்துக்கொள்வதாகவும் குற்றம் சாட்டினார் ஜெயஸ்ரீ.இதற்கு பதிலளித்த ஈஸ்வர் , ஜெயஸ்ரீ தன் மீது வீண் பழி சுமத்துவதாகவும் , பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பதிலுக்கு குற்றம் சாட்டினார்.  அதனை தொடர்ந்து ஈஸ்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பின்னர் இவர்கள் இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பின் வெவ்வேறு தளங்களில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.




இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்து, தன்னை விட 6  வயது சிறிய ராகவேஷ் என்னும் மருத்துவருடன்  ஜெயஸ்ரீ Live - In உறவில் இருப்பதாக  குற்றம் சாட்டினார். மேலும் இது போல பல ஆண்களுடன் பழகி அவர் பணம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். லிவ் இன் உறவில் இருக்கும் ராகவேஷின் தந்தை மிகுந்த அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்றும் , அவர் ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கூட , தனது மகனுக்கும் மனைவிக்கும் நெருக்கமான உறவு இருப்பதை அறிந்து ஈஸ்வரிடம் அவர்களை பிரிக்க உதவி கேட்டதாக தெரிவித்த ஈஸ்வர், தான் மறுத்துவிட்டதால் வேறு வழி இல்லை ஜெயஸ்ரீயை கொல்லவும் தயங்கமாட்டேன் என கோவமாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்னை குற்றம் சாட்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் , முன்கூட்டியே காவல் ஆணையரிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்துள்ளேன் என தெரிவித்திருந்தார். 






இந்நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ள ஜெயஸ்ரீ, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அதனை திசை திருப்பவே ஈஸ்வர் இவ்வாறு செய்கிறார். பெண்கள் மீது குற்றம் சுமத்த வேண்டுமானால் அவரை வேறு ஒருவருடன் தொடர்புபடுத்தி பேசுவது வழக்கமாகிவிட்டது. நீதிமன்றத்தில் தீர்ப்பு எனக்கு சாதகமாக வரும் என்ற பயத்தில்தான் இப்படியான போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் ஈஸ்வர். அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கேள்விப்பட்டேன்..எனக்கான பணத்தை கொடுக்காமல் நழுவி விடலாம் என பார்க்கிறார். நிச்சயம் விட மாட்டேன்..என் சட்டப்போராட்டம் தொடரும் “என குறிப்பிட்டுள்ளார்.