90 ஸ் கிட்ஸ் முதல் தற்போது வரை பலரின் கனவு நாயகனாக சின்னத்திரையில் வலம் வந்தவர் பிரஜின். பல ஆண்டுகளாக சினிமா வாய்ப்பிற்காக காத்திருந்த இவரின் கனவு நினைவானதால் சீரியிலில் இருந்து விலகியுள்ளார்.
கொரோனா தொற்றின் தாக்கம் ஒரு புறம் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிது. ஆனால் மற்றொரு புறம் பலரை சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு அடிட் ஆகிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஆம் ஊரங்கினால் மக்கள் பலர் வீடுகளில் முடங்கி கிடந்த காலத்தில், ரசிகர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்போடு, ஒவ்வொரு சேனல்களும் நாள்தோறும் புதுப்புது நிகழ்ச்சிகளை அரங்கேற்றிவருகின்றர். இதில் பல சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவருகிறது. அதோடு அதில் நடித்துவந்த நடிகர்களும் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இணையாக சின்னத்திரையிலும் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சின்னத்தம்பி, அன்புடன் குஷி சீரியலில் நடித்த பிரஜின். கடந்த 2005 ஆம் ஆண்டு சின்னத்திரை சீரியலில் அறிமுகமான இவருக்கு தற்போதும் மவுசு குறையவில்லை.
சின்னத்திரையில் எத்தனையோ ரசிகர்கள் இருந்தாலும், பிரஜின் வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்துவருகிறார். டிஷ்யூம் படத்தில் வெள்ளத்திரையில் அறிமுகமான இவருக்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றிக்கிடைக்காத நிலையில் மீண்டும் சின்னத்திரையில் திறமையை வெளிப்படுத்திவருகிறார்.
குறிப்பாக சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அன்புடன் குஷி உள்ளிட்ட சீரியல்களின் மூலம் தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் அன்புடன் குஷி முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். மிகக்குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்ற இந்த சீரியலை பிரஜினுக்காவே சீரியலை ரசிகர்கள் பார்த்துவந்தனர். இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக வைதேகி காத்திருந்தால் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் என ரசிகர்கள் குழம்பி இருந்த நிலையில் சின்னத்திரை நாயகன், வெள்ளித்திரை நாயகனாக களம் காணவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரஜின் எதிர்ப்பார்த்த பட வாய்ப்பு வந்துக்கொண்டிருப்பதால், சினிமா மற்றும் சீரியல் என இரண்டிற்கும் கால்சீட் கொடுப்பதற்குப் பிரச்சனை வருவதால் சீரியலில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிரஜின் நினைவெல்லாம் நீயா மற்றும் சங்கரலிங்கத்தின் சைக்கள் வண்டி என்ற இரு படங்களில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் யார் பிரஜின் கேரக்டரில் நடிக்க விருக்கிறார்? என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.