watch video: சாமி சாமி பாடலுக்கு செம்ம குத்து நடனம் ஆடும் சீரியல் அம்மா நடிகை...!

நடிகர்களின் ஃபாலோயர்களும் அதிகமாகிறார்கள் அதே சமயம் சீரியலுக்கான மார்க்கெட்டிங்கும் அதிகரிக்கிறது

Continues below advertisement

சினிமா வீடியோக்களை விட அதன் இன்ஸ்டா ரீல் வீடியோக்கள்தான் அதிகம் ஹிட் அடிக்கின்றன. அதுவும் குறிப்பாகச் சின்னத்திரைப் பிரபலங்கள் அதனை ரீலாக ரீமேக் செய்வது பெரிய அளவில் வைரலாகிறது. இதனால் இந்த நடிகர்களின் ஃபாலோயர்களும் அதிகமாகிறார்கள். அதே சமயம் சீரியலுக்கான மார்க்கெட்டிங்கும் அதிகரிக்கிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு செய்யப்பட்ட பல இன்ஸ்டா ரீல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. அந்த வகையில் புஷ்பா படத்தின் ஊ சொல்றியா பாடலுக்கும் இன்ஸ்டா ரீல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே அந்தப் படத்தின் சாமி சாமி பாடலுக்கு அண்மையில் சீரியல் நடிகர் மீரா கிருஷ்ணன் ரீல் உருவாக்கியது தற்போது வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

மீரா கிருஷ்ணன் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பல சீரியல்களில் நடித்து வரும் மீரா தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தன்னை விட வயது அதிகமான நடிகர் தீபக்கிற்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola