கயல் தொடரில் நடித்து வரும் பிரபல சீரியல் நடிகை அபிநவ்யா கர்ப்பமாக இருப்பதை தன்னுடைய பிறந்தநாளில் அறிவித்துள்ளார். 


சன் டிவியில் ஒளிப்பரப்பான  'பிரியமானவள்' தொடரில் ஸ்வாதி என்ற கேரக்டரிலும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் அபிநவ்யா. செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்த அபிநவ்யா கயல் சீரியலில் ஆனந்தி ரோலில் நடித்து வருகிறார். இவர் பூமி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்தாண்டு சீரியல் நடிகர் தீபக்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.






கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடரில் நவீன் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற தீபக் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, தற்போது ஈரமான ரோஜாவே -2 ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். திருமணம் முடிந்து இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வந்தனர்.  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். 






அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வண்ணம்  தனது கணவர் தீபக்குடன் சேர்ந்து எடுத்த மெட்டர்னிட்டி ஃபோட்டோ ஷூட் (கர்ப்பகால போட்டோக்கள்) போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.