ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அருண் மாதேஸ்வரன். வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோரை வைத்து இவர் இயக்கிய ராக்கி திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.
ராக்கி படம் மட்டுமின்றி செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து அருண் மாதேஸ்வரன் சாணிக்காயிதம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
ராக்கி பட வெளியீட்டிற்கு முன்பாகவே சாணி காயிதம் படத்தின் வேலைகள் தொடங்கிய நிலையில் படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சாணி காயிதம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் படி ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் எனத் தெரிய வருகிறது. தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் அடுத்த படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.