தன் முனைப்பு ஒரு சவால்தான் என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.


2012ம் ஆண்டு வெளியான "3" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. அதனை தொடர்ந்து சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தையும் மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கினார். 


தொடந்து திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் வைத்து ஒரு படத்தையும் பாலிவுட்டில் ஒரு படத்தையும் இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 


தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றார். பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீது உள்ள அக்கறையால் அவர்களது பெற்றோர்கள் சுமுகமாக இந்தப் பிரச்னையை தீர்க்க பார்க்கிறார்கள். தனுஷ் சற்று இறங்கி வர தயாராக இருந்தாலும் ஐஸ்வர்யா அதற்கு ஒத்துவர மறுக்கிறார் எனக் கூறப்படுகிறது. சிலர் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மறுபடியும் சேர்ந்து வாழ முடிவு எடுத்துள்ளனர் என தகவல்கள் பரிமாறப்படுகிறது ஆனால் இதில் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை.


இந்நிலையில் அண்மையில் ஐஸ்வர்யா ட்விட்டரில் ஒரு ஃபிட்நஸ் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அத்துடன் சில உத்வேக வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளார். அதில் ஐஸ்வர்யா, "சுய முனைப்பு என்பது ஒரு சவால்தான். அதுவும் அது ஒரு மந்திரச் சாவி. உங்கள் முன்னால் இருக்கும் கண்ணாடி நீங்கள் உள்ளேயும் வெளியேயும் நீங்கள் எவ்வளவு உறுதியானவர் என்பதைக் காட்டும். வெளியில் இருந்து எந்த சக்தியும் உங்களை நீங்கள் சந்தேகப்படும் படி செய்யாதிருக்கட்டும். நீங்கள் அந்த அளவும் நம்பிக்கையுடன் மிளிருங்கள். உங்களுக்கு இந்த உலகம் உதவி செய்யும் " என்று பதிவிட்டுள்ளார்.


அவரது இந்த ட்வீட்டை ரஜினி ரசிகர்களும் சேர்ந்தே கொண்டாடி வருகின்றனர்.






பிரபலத்தின் வாரிசாக இருப்பதும் சவால்:


"ஒரு நடிகரின் குழந்தையாக இருப்பது மிகப்பெரிய சவால். நடிகர்களின் குழந்தைகளுக்கு இது எளிதானது மற்றும் அவர்கள் எல்லாவற்றையும் ஈசியாகப் பெறுவார்கள் என்ற கருத்தை பொதுவாக மக்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது எதிர்மாறானது. அது மிகவும் சவாலானது, ஏனென்றால் நாம் நம்மை நிரூபிக்க வேண்டும். நாம் தவறு செய்ய முடியாது. நாம் உண்மையில் தவறு செய்யக் கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் தவறு செய்து தப்பிப்பது எளிது. ஆனால் நாம் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, நீங்கள் அதே துறையில் இருக்க விரும்பினால், ஒரு நடிகரின் குழந்தையாக இருப்பது மிகவும் சவாலானது என்று நான் நினைக்கிறேன். எங்களைச் சுற்றி நாங்கள் சாதிக்க வேண்டும், வளர வேண்டும் என்று விரும்பும் நபர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நம் பெற்றோரை நேசிப்பதால் அவர்கள் எங்களை தங்கள் சொந்த வீட்டு குழந்தைகளாகப் பார்க்கிறார்கள். எனவே இவற்றையெல்லாம் நாம் எண்ணி சரியான சிந்தனையுடன் சவால்களை ஏற்று முன்னேற வேண்டியிருக்கிறது,” என்று ஐஸ்வர்யா கூறினார்.