இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'மாமனிதன்' திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றதோடு சர்வதேச அளவில் அங்கீகாரமும் பெற்று வருகிறது. 


ரஷ்யாவில் 'மாமனிதன்' :
 
அந்த வகையில் 45வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏப்ரல் 20 முதல் 27-ம் தேதி வரை உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை திரையிடப்படும். அந்த வகையில் சீனு ராமசாமியின் 'மாமனிதன்' திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படவுள்ளது.  விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படத்தை திரையிட தேர்வு செய்தனர் ரஷ்ய அரசாங்கம். அதில் மாமனிதன் படம் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வாகி விருதுகளை குவித்து வருகிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர்ப்பறவை'. 'தர்மதுரை', 'இடம் பொருள் ஏவல்'  போன்ற பல அற்புதமான படைப்புகளை தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வெளியான மிகவும் தரமான படம் 'மாமனிதன்' என்பது குறிப்பிடத்தக்கது.  


 



யதார்த்தமான திரைக்கதை :


இயக்குனர் சீனு ராமசாமி எழுதி இயக்கிய மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, அனிகா சுரேந்தர், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிராமத்து பின்னணியில் சாதாரண மனிதர்களின் இயல்பான வாழ்க்கையை பற்றி யதார்த்தமாக பேசியது இப்படம். குடும்பத்தின் நிம்மதிக்காக கதாநாயகன் படும் சிரமங்களை மிகவும் அழகாகவும் அழுத்தமாகவும் காட்சிப்படுத்தியது இப்படம். இப்படத்திற்கு முதல்முறையாக கூட்டணி சேர்ந்து இசையமைத்து இருந்தனர் இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா. 


இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி என்றாலும் அவர்கள் இருவரின் சாயலும் பாடல்களில் காணாமல் போனது. இதுவரையில் சீனு ராமசாமி படங்களின் பாடல்கள் தேசிய விருது பெற்றுள்ளன. ஆனால் இப்படத்தில் பாடல்கள் மிகவும் சுமாராக இருந்தன.  இப்படத்தின் பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் அதிகமாக இருந்து இருக்கலாம். 


விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்த இப்படம் திரையர்ந்து வசூலை காட்டிலும் ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படத்தில் நடித்த கதாபத்திரங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் அவர்கள் அனைவர்க்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. படத்தின் நடித்த பலருக்கும் விருதுகளை பெற்று தந்துள்ளது.