Seeman vs Vijay: அரசியல் களத்தில் விஜய்க்கு எதிராக இருக்கும் சீமான் தற்போது சினிமாவிலும் விஜய்க்கு எதிராக களம் இறங்க இருக்கிறார். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

விஜய்க்கு எதிராக களம்:

 நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த போது முதல் ஆளாக வந்து வாழ்த்து சொன்னவர் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். “என்னோட தம்பி அரசியலுக்கு வந்துருக்காரு.. அவர ஆதரிக்க வேண்டியது என்னோட கடமை”என்று சொன்னார். தொடர்ந்து விஜய்க்கு தன்னுடைய ஆதரவையும் தெரிவித்து வந்தார். இதனிடையே தான் தவெகவின் முதல் மா நாட்டில் திரவிடாமும் , தமிழ் தேசியமும் தங்களது இரு கண்கள் என்று விஜய் பேச அன்றில் இருந்து விஜயை அரசியல் ரீதியாக எதிர்க்க ஆரம்பித்தார் சீமான்.

தொடர்ந்து திராவிட சிந்தாந்தத்திற்கு எதிராக இருக்கும் சீமான் பெரியாரையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சூழாலில் விஜய் இவ்வாறு பேசியதும் கொள்கை தலைவர்களில் ஒருவராக பெரியாரை அறிவித்ததாலும் கடுப்பானர் சீமான். “ ஒன்னு ரோட்டுக்கு அந்த பக்கம் நில்லு. இல்ல இந்த பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரியில அடிப்பட்டு செத்து போய்டுவ”என்று பேசினார். அன்றிலிருந்து தற்போதுவரை அரசியல் ரீதியில் விஜயை எதிர்த்து வரும் சீமான் சினிமாவிலும் விஜய்க்கு எதிராக களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தான் தர்மயுத்தம் என்ற பெயரில் உருவாகியுள்ள திரைப்படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

அதன்படி போலீஸ் அதிகாரியாக சீமான் இந்த படத்தில் நடித்திருப்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு  வெளியான தர்மயுத்தம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரியவந்து.  இந்த நிலையில் தான் இந்த படம் ஜனவரி 9 ஆம் தேதி ஜ நாயகனுக்கு போட்டியாக வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.