டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ போட்டித் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு நவம்பர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், நிதித் துறைகளில் காலியாக உள்ள உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 32 இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடக்க உள்ளது.
வயது வரம்பு என்ன?
இதில் உதவிப்பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல உதவியாளர் பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் - 05.11.2025 11.59 மணி வரை
விண்ணப்பத் திருத்தச் சாளர காலம் - 10.11.2025 12.01 மு.ப முதல் 12.11.2025 11.59 பி.ப வரை
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்
தாள் I பொதுத் தமிழ் - 21.12.2025 - 09.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை
தாள் II பொது ஆங்கிலம் 21.12.2025 - 02.30 பி.ப முதல் 05.30 பி.ப வரை
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன், https://tnpsc.gov.in/Document/tamil/16_2025_Group%20VA_Tamil.pdf என்ற அறிவிக்கையை முழுமையாகப் படித்தபிறகு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதிலேயே கல்வி தகுதி, பணி அனுபவம், பிற விவரங்கள், என்னென்ன சான்றிதழ்கள் தேவை? என்ன பாடத் திட்டம் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/