கலக்கப்போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி மக்கள் நகர்ந்தாலும் சனி, ஞாயிற்றுக்கிழமை உட்பட வருடம் 365 நாட்களையும் பார்வையாளர்களை தக்கவைக்க இதனால் வாரத்தில் இறுதி நாட்கள் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை காணவே அதிகப்படியான பார்வையாளர்கள் உள்ளனர்.
என்னதான் போட்டி போட்டுக் கொண்டு சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் ஆண்டுகள் பல கடந்தாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி கடந்த 2005 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியின் ஸ்டாண்ட் அப் காமெடிக்கு கிடைத்த வரவேற்பை தொடந்து, அதில் பங்கேற்ற பலரும் சினிமா துறையில் தற்போது முன்னணி இடத்தில் உள்ளனர்.
இதனிடையே கலக்கப்போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.அதில் நடுவர்களாக நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, ஸ்ருதிகா அர்ஜூன், நடிகர்கள் தாடி பாலாஜி, மதுரை முத்து ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இன்று (பிப்ரவரி 19) ஒளிபரப்பான எபிசோடில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற குக் வித் கோமாளி புகழ் பாலா, சீமானை A-Z புகழ்ந்து தள்ளினார்.
புகழ் பாடிய பாலா
A for All time favourite , B for bachelor of social service C for current generation, D for Director E for Education to everyone, F for Farmers Leader G for Gaurdian of Human Rights, H for Hero of Tamilnadu I for Intelligent person, J for Justice for TruthK for King of politics, L for Loveable PersonM for Motivational speaker, N for Naam TamilarO for out Standing,P for Pride of IndiaQ for Quality of Truth,R for Roaring of lionS for Super Singer,T for Trending Star U for Uniqueness , V for Vaaippilla Raja is Famous wordW for Waiting for His Turn, X for Xray of love Y for Yungsters Hero, Z for Zero Attitude என பாலா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.