பாலிவுட்டின் பிரபல நடிகையும் இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரரமான விராட்கோலி தம்பதியினர், தற்போது பிரபல பாலிவுட் நடிகை அன்சுல் சவுகானுடன் அவரின் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். தற்போது நடிகை அனுஷ்கா ஷர்மா சக்தா எக்ஸ்பிரஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் பாலிவுட் நடிகை அன்சுல் சவுகான் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டுள்ளது. இதில்  நடிகை அனுஷ்கா சர்மாவின் கணவரும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரருமான விராட் கோலி சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். இதில் மிகவும், மகிழ்ச்சி அடைந்த அன்சுல் சவுகான் விராட் கோலியுடன் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 






இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் லண்டனில் நடந்து வந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றுள்ளது. அனுஷ்கா சர்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, லண்டனுக்குச் சென்று அன்சுல் சவுகானுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் விராட் கோலி. இந்த வீடியோவில் நடிகை அன்சுல் சவுகான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். விராட் கோலி அருகில் ஆச்சரியத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி பூரிப்புடன் நின்றபடி உள்ளார். சக்டே எக்ஸ்பிரஸ் திரைப்படம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜுலான் கோசுவாமியின் வாழ்க்கையினை மைய்யமாக கொண்டு எடுக்கப்படும் பயோபிக் மூவீ ஆகும். 


ஜுலான் கோசுவாமி கொல்கத்தாவின் சக்தா எனும் பகுதியைச் சேர்ந்த்வர் என்பதால் படத்திற்கு சக்தா எக்ஸ்பிரஸ் எனும் பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்திய பெண்கள் அணிக்காக விளையாட நினைக்கும் பெரும்பாலான வீராங்கனைகளுக்கு  ஜுலான் கோசுவாமி ஒரு மாபெரும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இவரது திறமைய பாராட்டி இந்திய தபால் துறை 2018ஆம் ஆண்டில் சிறப்பு தபால் தலை வெளியிட்டது. ஜுலான் கோசுவாமி சர்வதேச பெண்கள் கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் எனும் சாதனையினை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டியில் 44 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 252 விக்கெட்டுகளும், டி20 போட்டியில் 56 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இவரது சிறப்பான விளையாட்டை பாராட்டும் விதமாக இந்திய அரசு இவருக்கு 2012ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது. இந்த படட்த்தின் படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்து படம் திரையரங்குகளில் இந்த ஆண்டு இறிதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவர இருக்கிறது.