கோலிவு சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வந்தாலும் , இசையமைப்பாளராக இவரை ரசிப்பவர்கள் ஏராளம். பொதுவாக விஜய் ஆண்டனி தனக்கென தனி பாணி ஒன்றை வைத்திருப்பார். தான் மெட்டமைக்கும் பாடல்களில் , குறிப்பாக ஃபோக், நடன அசைவுகள் அதிகம் இருக்கும் பாடல்களில் புரியாத வார்த்தைகளை அறிமுகப்படுத்துவார். அப்படித்தான் “நாக்கு .. முக்கா, மக்காயாலா , மக்காயாலா, சில்லாக்ஸ்..சில்லாக்ஸ் “என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நிலையில் நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சில்லாக்ஸ் பாட்டு உருவான விதம் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
”மஞ்சநெத்தி மரத்துக்கட்ட...மைய வச்சு மயக்கிப்புட்ட...நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட...ரெண்டும் கலந்த செமகட்ட...கையிரண்டும் உருட்டுக்கட்ட...கண்ணு ரெண்டும் வெட்ட வெட்ட...நெஞ்சுக்குள்ள ரெத்தம் சொட்ட
எதுக்கு வர்ற கிட்ட அப்படினு கருத்துள்ள பாட்டை கொடுத்தாரு. அந்த கருத்தை கேட்டதும் கம்போஸ் பண்ணி முடிச்சாச்சு. அதுக்கப்பறம் வந்து இன்னும் கூடுதல் விஷயம் சேர்கலாம்னு தோணுச்சு . அப்போதான் என்கிட்ட ஒரு பெண் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது , சில்லாக்ஸ்னு ஒரு வார்த்தைய சொன்னாங்க. அது என்னதுனு கேட்டப்போ. அதுக்கு பொருள் chill ஆக இருங்க. ரிலாக்ஸ்டா இருங்கங்குறதோட மிக்ஸ்னு சொன்னாங்க. இதை ஓபனிங்ல வைக்கலாம்னு வச்சேன். இது ஒரு தரப்பு மக்கள் பயன்படுத்துறாங்க , இதை எல்லோரும் பயன்படுத்தனும்னு யூஸ் பண்ணிட்டேன். இலை மறை காயாக ஒரு விஷயத்தை , கருத்தா சொல்லனும். அது மொழி தெரியாதவங்க , குழந்தைகள் அப்படினு எல்லோரையும் சென்றடையனும். விஜய் நடித்த வேலாயுதம் படத்துல வேலா...வேலா..அப்படினு மற்றொரு பாடல் இருக்கும் அது புரமோஷனுக்காக போட்ட பாட்டு , ஆனா அந்த பாட்டு செமையா ஹிட் ஆனதாலதான் அதை நான் ஒரு பாட்டாகவே படத்துல வச்சேன் “ என சுவார்ஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி.