நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா, அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவரது குழந்தை போட்டோவை பதிவு செய்து இருக்கிறார்.


ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் கோலிவுட்டின் க்யூட் ஜோடி ஆவர். இவர்கள் இருவருக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் இருந்தாலுமே, இந்த ஜோடிக்கு பல ரசிகர் கூட்டம் உண்டு. கடந்த ஆண்டில் இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு அரியனா என்ற பெயரை சூட்டினர். இதுவரை அக்குழந்தையின் புகைப்படத்தை சாயிஷாவோ ஆரியாவோ பகிர்ந்ததே இல்லை.






ஆனால், இப்போது சாயிஷா அக்குழந்தையின் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் டெல்லி சென்று அவரின் தாயான ஷஹீன் பானுவுடன் நேரத்தை செலவிட்ட ஆயிஷா, அவை அனைத்தையும் வீடியோவாக ஷூட் செய்து ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோவின் இடையில், அரியனாவின் வீடியோ ஒன்றும் இணைந்துள்ளது. குழந்தையின் முகம் தெரியாவிட்டாலும், அந்த க்யூட்டியின் பின் பக்கம் மட்டும் தெரியும் வகையில் அமைந்துள்ளது.


இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்த ஆர்யா மற்றும் சாயிஷா கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ‘கஜினிகாந்த்’ படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின், கே.வி ஆனந்தின் “காப்பான்” படத்திலும் இவர்கள் ஒன்றாக நடித்தனர். அதன் பின்னர், கற்பனைக்கு எட்டா கதைகளத்தை கொண்ட ‘டெடி’ படத்தில் இணைந்து ஜோடியாக நடித்தனர்.






குழந்தை பிறந்த பிறகு, சாயிஷா எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அவர் கணவரான ஆர்யா, கேப்டன் படத்தில் நடித்தார். தற்போது, முத்தையா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்தி இத்னானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுபோக, ‘தி வில்லேஜ்’ என்ற ஜாம்பி சீரிஸும் ஓடிடியில் வெளியாகவுள்ளது.