திரையுலகை சேர்ந்த பல நடிகைகளுக்கு தமிழ் ஓரளவுக்கு தெரிந்து இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு டப்பிங் தான் பேச படுகிறது. அப்படி நடிகைகளின் இனிமையான குரலுக்கு பின்னணியில் திறமையான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு நடிகைகளின் குணாதிசயங்களுக்கு ஏற்றார் போல அவர்களின் குரல்களில் சில நுணுக்கங்களை பயன்படுத்தி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார்கள். 



அந்த வகையில் ரவீனா ரவி, தீபா வெங்கட், சரிதா, ரோகினி, ஸ்ரீஜா ரவி, நிவாஸினி என ஏராளமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பிரபலமானவர்களாக இருந்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஒரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சிம்ரன், ஹன்சிகா, லைலா, ஷாலினி, தேவயானி, ஜோதிகா, அனுஷ்கா, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சினேகா, ஜெனிலியா என ஏராளமான நடிகைகளின் குரலாக கனகச்சிதமாக ஒலித்தவர் சவிதா ராதாகிருஷ்ணன். 


ஜீன்ஸ் படத்திற்காக ஐஸ்வர்யா ராய், துள்ளாத மனமும் துள்ளும், விஐபி, கண்ணெதிரே தோன்றினாள், வாலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடிகர் சிம்ரனின் குரலாக ஒலித்தவர் சவிதா ராதாகிருஷ்ணன். ஜோதிகாவுக்காக முகவரி, பூவெல்லாம் கேட்டுப்பார், ஹன்சிகாவுக்காக மாப்பிள்ளை, குலேபகாவலி, திரிஷாவுக்காக மௌனம் பேசியதே, பீமா, சாமி, லைலாவுக்காக பார்த்தேன் ரசித்தேன், நந்தா, பிதாமகன், கண்ட நாள் முதல் இப்படி எத்தனை எத்தனையோ படங்களில் நடிகைகளின் குரலாக ஒலித்தவர் சவிதா ராதாகிருஷ்ணன்.



அந்த வகையில் சவிதா ராதாகிருஷ்னன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் நந்தா படத்தில் நடிகை லைலாவுக்கு டப்பிங் பேசியதை ரீ கிரியேட் செய்து அசத்தியுள்ளார். அவருக்கு நந்தா படத்தில் லைலா பயந்து பயந்து, தடுமாறி பேசும் அந்த காட்சி தான் மிகவும் ஃபேவரட்டான காட்சி என கூறி அதை அழகாக பேசி இருந்தார். லைலாவுக்கு பேசின படங்களிலேயே இந்த காட்சி தான் அவருக்கு மிகவும் பிடித்த காட்சியாம். யாழ்ப்பாணத்தில் இருந்து அகதிகளாக வந்து இருக்கும் லைலா சூர்யாவை பார்த்து பயத்தில் தட்டுத் தடுமாறி இலங்கை தமிழில் பேசுவதுபோல அமைந்து இருக்கும் அந்த காட்சி. 







ஒரு முறை கண்களை மூடி இந்த டயலாக் கேட்டால் லைலா முன் நின்று பேசுவது போலவே இருக்கும். அதை மிகவும் அழகாக எனாக்ட் செய்த சவிதா ராதாகிருஷ்ணனின் இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.