நிறைய ஹீரோக்கள் கூட நடிச்சிருக்கேன். ஒரு ஹீரோவுக்கு ஹீரோயின் பட்டம் கொடுத்தது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். இவ்வளவு அழகான ஹீரோவ பார்த்த ஹீரோயினுக்கு பட்டம் கொடுக்கத்தான் தோணும். நடிப்பு நாயகன் சூர்யா அப்படிங்கிற பட்டம் அவருக்கு பொருத்தமா இருக்கும்.


சூர்யா நிஜ வாழ்கையில யாருக்கும் பயப்படுறது இல்ல. ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் பெரியார் பற்றி பேச செல்ல வேண்டியிருந்தது. உடனே என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தயவுசெய்து அங்கெல்லாம் செல்லாதீர்கள் என்று கூறினர். ஆனால் நான் அதையும் மீறி அங்கு சென்றேன். இன்று சூர்யா படத்தில் பெரியார், அம்பேத்கர் படங்கள் தொடர்ந்து காட்டப்படுகிறது. நான் சூர்யாவுக்கு புரட்சிநாயகன்னு பட்டம் கொடுக்குறேன். 




சூர்யாக்கிட்ட இருந்து நிறைய டிப்ஸ் கிடைச்சது.  நானெல்லாம் குத்து மதிப்ப உடற்பயிற்சி செய்ற ஆளு. சூர்யா ரொம்ப டெக்னிக்கலா உடற்பயிற்சி செய்ற ஆளு..நான் 15 நிமிஷத்துல 100 புஷ்அப்ஸ் போடுவேன். சூர்யா எனக்கு நிறைய சொல்லித்தந்தாரு." என்று பேசினார். 


சூர்யா பேசியது


அதில், ''நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நேரம் உக்ரைனில் அறியாத, எதுவும் தெரியாத மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் அங்கி சிக்கியுள்ளனர். எனக்கு கூட்டு பிரார்த்தனையில் நம்பிக்கையுள்ளது. அங்கிருப்பவர்கள் பாதுகாப்பாக வர வேண்டும். அரசு எல்லாமே செய்கிறது. ஆனால் சில வீடியோக்களை பார்த்தால் மனசு படபடக்குது. உயிர்ச்சேதம் ஏதுமின்றி அனைவரும் திரும்பி வர வேண்டும். அனைவரும் வேண்டிக்கொள்வோம். இரண்டரை வருஷம் கழித்து திரையரங்கில் வரப்போகுது. 






 



தியேட்டரில்தான் அனைத்தையுமே கற்றுக்கொண்டேன். நம்மை நாமே செதுக்கிக் கொள்ள வேண்டுமென்பதை தியேட்டர் மூலமே கற்றுக்கொண்டேன். மறுபடி தியேட்டரில் என் படத்தை குடும்பத்துடன் பார்க்கப் போகிறீர்கள் என்பதே பெருமகிழ்ச்சி. அதற்கு சரியான படம். லாக்டவுனில் இந்த படத்தை பண்ணோம். அனைத்து யூனிட் ஆட்களுக்கும் நன்றி. சத்யராஜ் எனக்கு மாமா. பிறந்தது முதல் எங்களுடன் இருக்கிறார். அவருடைய அன்பே ஆசீர்வாதம்'' என்றார்