பாலிவுட்டில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்த வைஷாலி தக்கர் ( Vaishali Takkar ) தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுளார்.
பாலிவுட் சீரியல் நடிகை வைஷாலி தக்கர் இன்று மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் மீட்கப்பட்ட போது அந்த இடத்தில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தான் தனது முன்னாள் காதலனால் மிகவும் துன்புறுத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக மிகுந்த மன அழுத்ததில் இருந்ததாகவும் அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான வழக்கு மும்பை தேஜாஜி நகர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு வருடமாக அவர் இந்தூரில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. “Sasural Simar Ka" சீரியலில் இடம் பெற்றிருந்த அஞ்சலி பரத்வாஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வைஷாலி தக்கர், ‘Super Sisters’ ‘Vish Ya Amrit’ ‘Manmohini 2' உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
Yeh Rishta Kya Kehlata Hai என்ற சீரியலில் சஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் கடைசியாக Rakshabandhan படத்தில் நடித்திருந்தார். கடந்த வருடம் ஏபரல் இறுதியில் இவருக்கு கென்யா நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங் உடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் செய்தி வெளியிட்டது.
அவருக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக இருந்தது. ஆனால் வேவ்வேறு காரணங்களால் அந்த திருமணம் தடைபட்டு போனதாக வைசாலி தெரிவித்தார்.