டூரிஸ்ட் ஃபேமிலி
ஒருபக்கம் பெரிய பட்ஜெட் படங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றத்தைக் கொடுத்து வந்தாலும் அவ்வப்போது வரும் ஒரு சில சின்ன பட்ஜெட் படங்கள் மரகதங்களா ஜொலிக்கின்றன. கடந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து திரைப்படம் ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்றது. அதேபோல் இந்த ஆண்டு டூரிஸ்ட் ஃபேமிலி படம் நல்ல ஃபேமிலி என்டர்டெயினராக அமைந்துள்ளது
24 வயதேயான அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி ஆகிய பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு தப்பி வரும் ஒரு குடும்பத்தை மையப்படுத்திய கதை டூரிஸ்ட் ஃபேமிலி. காமெடி , எமொஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது
டூரிஸ்ட் ஃபேமிலி வசூல்
குட் நைட் , லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ரூ 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 27 நாட்களில் ரூ83 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயக்குநர் ராஜமெளலி , நடிகர் ரஜினிகாந்த் , சிவகார்த்திகேயன் உட்பட திரைத்துறையைச் சேர்ந்த பலர் இந்த படத்திற்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள். சிறிய பட்ஜெட் படங்களின் வசூல் வெற்றி மேலும் இதேபோல் படங்கள் உருவாவதற்கு பெரிய ஊக்கமாக அமைகின்றன. அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் குடும்பங்களை மையப்படுத்திய கதைகள் உருவாவதற்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் ஜூன் 2 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாக இருக்கிறது. திரையரங்கத்தைப் போலவே ஓடிடி தளத்திலும் படத்திற்கு பரவலாக பாராட்டுக்கள் கிடைக்கும் என நிச்சயம் சொல்லலாம்.
டூரிஸ்ட் ஃபேமிலியோ சேர்த்து வெளியான சூர்யாவின் ரெட்ரோ மற்றும் நானியின் ஹிட் 3 ஆகிய இரு படங்களும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளன. இருபடங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.