கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்தத் திரைப்படம் சுப்ரமணியபுரம். இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.


சசிகுமார், ஜெய், ஸ்வாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரகனி, ஆகியவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமார் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.


இன்று மலையாள திரைப்படங்களில் இருக்கு எதார்த்தத் தன்மை கதைகளுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என நாம் பாராட்டி வருகிறோம் . ஆனால் இந்த மலையாளத் திரைப்படங்களுக்கு பல சுப்ரமணியபுரம் அல்லது பருத்திவீரன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கின்றன. இன்று பாலிவுட் மற்றும் உலக அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் அனுராக் கஷ்யம் தனது மிகச் சிறந்த படமான கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் திரைப்படத்தை இயக்குவதற்கு தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக சுப்ரமணியபுரம் திரைப்படம் இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.


ஒரு கதையைச் சொல்வதற்கான மிகச்சரியான தொடக்கம் மையப்பிரச்சனை முடிவு ஆகிய மூன்று அம்சங்களும் மிகக்கச்சிதமாக திரைக்கதையைக் கொண்ட படம் சுப்ரமணியபுரம்.


கதை


அழகர், பரமன், காசி, டோபா, டும்கா ஆகிய ஐந்து நண்பர்கள் எந்த வித இலக்கும் இல்லாமல் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார்கள். சின்ன சின்ன தவறுகளை செய்து அடிக்கடி சிறைக்கு சென்று வருகிறார்கள். இவர்களுக்காக பேசி இவர்களை சிறையில் இருந்து வெளியே எடுக்கிறார் சோமு மற்றும் அவரது சகோதரனான கனுகு. முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் சோமு. எப்படியாவது வரக்கூடிய தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது அவரது இலக்காக இருக்கிறது. இதற்கிடையில் சோமுவின் மகளான துளசியுடன் காதல் கொள்கிறான் அழகர். தேர்தலில் வெற்றிபெறாமல் போகிறார் சோமு. அவரை எதிர்த்து போட்டியிட்டவரை இந்த நான்கு நண்பர்களை வைத்து கொலை செய்ய வைக்கிறார் கனகு. கனகு மேல் தாங்கள் வைத்திருக்கும் மரியாதைக்காக கொலை செய்துவிட்டு தங்களது ஊரைவிட்டு தப்பி ஓடுகிறார்கள் இந்த நால்வரும். ஆனால் காவல் துறை அவர்களை கண்டுபிடிக்கிறது. சிறையில் மாட்டிக்கொண்ட அழகர் மற்றும் பரமாவை ஜாமீனில் சோமு எடுப்பார் என்று எதிர்பார்க்க இவர்களை தவிஎத்து வருகிறார் சோமு. வேறு ஒருவரின் உதவியுடன் வெளியே வரும் அழகர் மற்றும் பரமா சோமுவையும் அவரது தம்பியையும் பழிவாங்க திட்டமிடுகிறார்கள். தன்னை சோமுவை கொலை செய்கிறார்கள், தன்னை காப்பாற்றிக் கொள்ள கனகு துளசியை வைத்து அழகரை கொலை செய்கிறார். அவரை பழி வாங்குகிறான் பரமா. இறுதியாக ஒரு நண்பனின் துரோகத்தில் சென்று முடிகிறது சுப்ரமணியபுரம் திரைப்படம்.