தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர் மற்றும் நடிகராக இருப்பவர் சசிமுருகன். சுப்ரமணியபுரம், ஈசன் படத்திற்கு பிறகு முழுவீச்சில் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சசிகுமார் கடந்த சில வருடங்களாக கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.
மை லார்ட் ட்ரெயிலர் ரிலீஸ்:
இவரது நடிப்பில் உருவாகியுள்ள மை லார்ட் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜுமுருகன் இயக்கியுள்ளார். குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய ராஜுமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக இயக்கிய ஜப்பான் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகிறது.
இந்த படத்தில் சசிகுமார் அயோத்தி, நந்தன் போன்ற படங்களில் நடித்தது போன்ற கனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ட்ரெயிலர் மூலம் தெரியவந்துள்ளது. சாமானிய குடும்பத்தினர் கிட்னி விற்பனையால் பாதிககப்படுவதை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியிருப்பதை ட்ரெயிலர் உணர்த்துகிறது.
ராஜுமுருகன் கம்பேக் தருவாரா?
ஜப்பான் படுதோல்விக்கு பிறகு ஜோக்கர் பட பாணியில் இந்த படத்தை ராஜுமுருகன் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சசிகுமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் சைத்ரா ஜே ஆச்சார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாசம், கோபி நயினார், வசுமித்ரா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நீரவ்ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.
கிட்னி விற்பனை:
கனமான கதைக்களம் இந்த படம் கிட்னி விற்பனை, கிட்னி திருட்டை மையமான கதைக்களத்தை கொண்டு உருவாகியிருப்பதால் இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகத்தை உலுக்கிய கிட்னி விற்பனை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களும் படத்தில் இடம்பெற்றிருப்பது ட்ரெயிலரில் காட்டப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.