'ஏய்.. மெண்ட்டல்' நடிகர் நானிக்கு ப்ராங்க் கால் செய்து கலாய்த்த பிரபல நடிகை : யார் தெரியுமா?

சரிபோதா சனிவாரம் படத்தின் ப்ரோமஷனின்போது பிரபல நடிகை நானியை செல்போனில் ப்ராங்க் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நானி. இவர் தற்போது டிவிவி ஆத்ரேயா இயக்கத்தில் சரிபோத சனிவாரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்தாண்டு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.

Continues below advertisement

சரிபோத சனிவாரம்:

கடந்த ஒரு ஆண்டுகாலமாக படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், இந்த படம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தெலுங்கு மட்டுமின்றி இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது.  இதையடுத்து, படக்குழுவினர் படத்தின் ப்ரோமாஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இதையடுத்து, தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு படத்தின் நாயகன் நானி, வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா மற்றும் நாயகி பிரியங்கா மோகன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் நானியின் ரசிகை ஒருவர் அவரிடம் செல்போனில் பேச ஆசைப்படுவதாக கூறி பேசினார்.

ஏய்.. மெண்ட்டல்:

நானியிடம் தனது பெயர் காயத்ரி என்றும், தங்களின் பரம ரசிகை என்றும் கூறினார். நானியும் அதைக் கேட்டு நன்றி கூறிக்கொண்டு இருந்தபோது, நானியின் மனைவி மற்றும் குழந்தை பற்றி கேட்டதும், நானி செல்போனில் தன்னிடம் பேசிக் கொண்டிருப்பது பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் என்று கண்டுபிடித்தார்.

அப்போது, உடனே அவர் ஏய்… கீர்த்தி.. மென்டலு என்று பேசினார். மேலும், அவரது ரகு தாத்தா படத்திற்கும் வாழ்த்து கூறினார். அவரிடம் செல்போனில் பிரியங்கா மோகனும் பேசினார்.

மிகுந்த எதிர்பார்ப்பு:

உடனே, அவரிடம் எஸ்.ஜே.சூர்யா தனது குரலை மாற்றி பேச முயற்சித்தார். அப்போது, பிரியங்கா மோகன் இது யாரென்று? கேட்டார். ஆனால், கீர்த்தி சுரேஷ் இது எஸ்.ஜே.சூர்யா சார் என்று கூறினார். எஸ்.ஜே.சூர்யா அடப்பாவிகளா கண்டுபிடிச்சிட்டாங்க என்று சிரித்துக் கொண்டே பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் இவர்களுடன் அதிதி பாலனும் நடித்துள்ளார். ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அபிராமி, சாய்குமார். முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு முதலில் சூர்யாவின் சனிக்கிழமை என்று தமிழில் பெயர் வைத்தனர். பின்னர், சூர்யாவின் சாட்டர்டே என்று பெயர் வைத்து அதே பெயரிலே தமிழில் வெளியாக உள்ளது.

நானியின் 31வது படமான இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக சென்னை கடற்கரையில் நானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி நேர்காணல் செய்யும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola