அக்ஷய் குமார்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் அக்ஷய் குமார். தனது அப்பா ராணுவ வீரராக இருந்த காரணத்தினால் தானும் ராணுவத்தில் சேர் வேண்டும் என்று ஆசைப்பாடார். இதற்காக சிறுவயதில் வெளிநாட்டிற்குச் சென்று கராத்தே , குத்துச் சண்டை பயிற்சி பெற்றார். பின் கனடாவில் குடி உரிமை பெற்று சில காலம் அங்கு வசித்து வந்தார்.
சினிமாவின் மீது ஆர்வம் வந்ததும் இந்தியா திரும்பி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். துணை கதாபாத்திரங்களில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கிய அக்ஷய் குமாரின் 150 படமான சர்ஃபிரா திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சர்ஃபிரா
தமிழில் கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடித்து சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இது அவரது 150-வது படமாகும். ராதிகா பிஸ்வாஸ், ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியிலும் சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. சர்ஃபிரா படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படியான நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அக்ஷய் குமார் என்பது தனது உண்மையான பெயர் இல்லை. தன் பெயரை மாற்றியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் பெயர் மாற்றிய காரணம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “ என் பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயர் ராஜீவ் ஹரி ஓம் பாட்டியா. நான் முதன் முதலில் ஆஜ் என்கிற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தேன். இந்த படத்தில் குமார் கெளரவ் நாயகனாக நடித்தார். படப்பிடிப்பின் போது கதையில் ஹீரொவின் பெயர் அக்ஷய் என்பதைத் தெரிந்துகொண்டேன். உடனே அதையே என்னுடைய பெயராக மாற்றிக் கொள்ள முடிவு செய்தேன்.
ராஜீவ் என்பது நல்ல பெயர் தான் அப்போது ராஜீவ் காந்தி தான் பிரதமராக இருந்தார். ஆனால் என் பெயரை நான் அக்ஷய் குமார் என்று மாற்றிக் கொள்ள விரும்பினேன். இதற்கு பின் எந்த ஆன்மிக காரணமும் இல்லை. என் பெயரை மாற்றியது குறித்து என் அப்பா கேட்டபோது கூட அவரிடம் நான் இதே காரணத்தை தான் சொன்னேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Indian 2 Box Office : மூன்றே நாளில் மகாராஜா படத்தின் வசூலை முறியடித்த கமல்...இந்தியன் 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்