இட்லி கடை 

டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நித்யா மேனன் , அருண் விஜய் , ராஜ்கிரண் ஆகியோ இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முன்னதாக ஏப்ரல் மாதம் இட்லி கடை வெளியாக இருந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் ரிலிஸ் தள்ளிப்போனது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை டாஸ்மாக் ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரனை செய்தது. இந்நிலையில் இட்லி கடை படத்தின் ஆடியோ ரைட்ஸை சாரேகாமா நிறுவனம் கைபற்றியுள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது

டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி , அதர்வா நடிக்கும் இதயம் முரளி , தனுஷின் இட்லி கடை , ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். சிம்புவின் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார். இதனிடையில் டாஸ்மாக் உழல் வழக்கில் அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஆகாஷ் பாஸ்கரன். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டாஸ்மாக் ஊழலுக்கு ஆகாஷ் பாஸ்கரனுக்கும்  தொடர்பு இருப்பது குறித்தான ஆவணங்களை சமர்பிக்காமல் எந்த வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது

தனுஷ் நடித்து வரும் படங்கள்

தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அடுத்தபடியாக இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் தேரே இஷ்க் மே படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் தனுஷ். ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ் , தமிழரசன் பச்சமுத்து ஆகிய இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து தனுஷ் நடிக்க இருக்கிறார்.