பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குனர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. தீபாவளி ரிலீஸாக வெளியான இப்படம் மக்களின் பேராதரவை பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. உளவாளி கதை தான் மைய கரு என்றாலும் அதனுடன் காமெடி, அரசியல் என அனைத்தின் கலவையான ஒரு கமர்ஷியல் மசாலா திரைப்படமாக சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.
கார்த்தியின் ஹிட் லிஸ்டில் சேர்ந்த சர்தார் :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்திக்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது. நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விருமன், பொன்னியின் செல்வன் 1 படங்களின் வெற்றி பட்டியலில் சர்தார் திரைப்படமும் இணைந்துள்ளது. உலகளவில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த சர்தார் திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வெற்றிகரமான 25 நாட்கள் :
சர்தார் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் ஆன நிலையில் இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். இன்றுடன் 'சர்தார்' திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்த பின்பும் ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்த ஆதரவு அபாரமானது. அதனால் எங்களது மனமார்ந்த நன்றிகளை மக்களுக்கும் எங்களின் ரசிகர்களும் தெரிவித்து கொள்கிறோம்' எனவும் பதிவிட்டுள்ளார். 25 நாட்களை கடந்தும் இன்றும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது சர்தார் திரைப்படம் . நடிகர் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்துடன் நேரடியாக களத்தில் மோதிய சர்தார் திரைப்படத்தின் வெற்றி அபாரமானது.
அடுத்ததாக ஜப்பான் :
சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'குக்கூ' புகழ் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.