வடகிழக்கு பருவமழை தமிழக முழுவதும் கனமழை பெய்து புரட்டி எடுத்து வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எடுக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் நிலைகளில் நீர் நிரம்பி வழிந்து செல்கின்றன. மேலும் நீர் இருப்பு தற்போது அதிகரித்து வருகின்றன.

 



 

கனரக வாகனங்கள் செல்ல தடை

 

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த மாகறல் மற்றும் வெங்கசேரி இடையே செல்லும் செய்யாற்றில்  தடுப்பணையை தாண்டி 3500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கின்றன. புதிய பாலம் அமைக்கப்பட்டு வருவதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தில் அடியில் நீர் வேகமாக செல்வதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

பாலம் துண்டிக்கபட்டால்

 

காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்ல மாகரல் வழியாக செல்ல வேண்டும் என்பதால் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனம் வந்து செல்லும். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் சேதமடைந்து தற்காலிக பாலம் அமைத்தனர். மேலும் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமனையில் பால முற்றிலுமாக சேதம் அடைந்து புது பாலம் கட்ட பணி தொடங்கியது பணி இன்னும் நிறைவடையாத காரணத்தால் தற்போது வரை தற்காலிக பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மேலும் நீர் வரத்து அதிகரித்தால், முற்றிலுமாக பாலத்தில் வாகனம் செல்ல தடை ஏற்பட்டால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல்வதற்கு வழி முற்றிலுமாக துண்டிக்கப்படும். பாலம் துண்டிக்கபட்டால் 20 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



 

அடுத்த 2 மணிநேரம்.. 8 மாவட்டங்களில் பொளக்க போகுது மழை.. எச்சரித்த வானிலை மையம்!

 


தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் 8 மாவட்டங்களில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்ககை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இன்று 14.11.2022 மழையின் காரணமாக குன்றத்தூர் தாலுக்கா பகுதிகளில் (மாங்காடு உட்பட) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவித்துள்ளார். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக மயிலாடுதுறையில் இன்று பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


காற்றழுத்த தாழ்வு பகுதி


நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும்.


இதன் காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.