சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில், அக்கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று  நெல்லையில்  நடைபெற்றது. அதில் பேசிய அவர், “56 ஆண்டுகள் இரு திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்துவிட்டனர். அண்மையில் வந்த சில தலைவர்கள் இவர்களை குறை செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால் குறை செல்லவேண்டாம் என்றாலும் அது நிறைவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.


இன்று வெள்ள நீர் வடியாதது குறித்து மறியல் போராட்டங்கள் முற்றுகை எல்லாம் செய்துகொண்டிருக்கும் மக்கள், தேர்தல் வந்தவுடன் அவர்களுக்குத்தான் மீண்டும் வாக்களித்து வெற்றி பெற செய்கிறார்கள். அதற்கு காரணம் பணம். ஜனநாயகம் போய் எல்லாம் பணநாயகமாகிவிட்டது. அதனை மாற்றவேண்டும். நான் ஒரு அமைதியான ஆறு; ஓடுவதும் தெரியாது, ஆழமும் புரியாது. ஆனால் 2026- ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாங்கள் நிற்கும் போது எங்களின் வேகமும், ஆழமும் புரியும். 


தமிழகத்தை மாறி மாறி திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றனர். மாறி மாறி இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களை கெடுத்து வைத்திருக்கின்றனர். தற்போது குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களது கணவன் வேலையில்லாமல் டாஸ்மாக்கிற்கு மட்டும் போயிட்டு வந்து நிம்மதியாக படுத்து தூங்குகிறார்கள். 


2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் இலக்கு அல்ல. 2026 -ஆம் அண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக பதவியேற்பேன். திராவிட இயக்கங்கள் தொடர்ந்தால் இன்னும் 10, 20 ஆண்டுகளின் நாம் வாக்களித்து அவர்கள் வெற்றிபெறவேண்டிய நிலை மாறி, வட இந்தியர்கள் வாக்களித்து திராவிட இயக்கங்கள் வெற்றி பெறும் நிலைமை உருவாகிவிடும். எல்லாரும் எல்லா மாநிலத்திற்கும் செல்லலாம்; ஆனால் அந்தந்த மாநிலத்தின் மக்களுக்குத்தான் முதலில் வேலை கிடைக்க வேண்டும்.


என் மாமியாருக்கு காலில் அடிபட்டு ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தாங்க. அவங்களை பார்க்க போயிருந்தேன். படுக்கையில் இருந்தவங்க என்னை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, " மாப்ள எப்போ நீங்க முதலமைச்சர் ஆகப் போறீங்க.."ன்னுதான்.. இப்போ சொல்றேன். 2026-லே நான்தான் முதலமைச்சர். யார்..யாரோ சொல்றாங்க...நான் சொல்லக் கூடாதா..மற்றவங்க சொன்னா சீரியஸ். நான் சொன்னா மட்டும் காமெடியா.." இவ்வாறு அவர் பேசினார். 


மேலும் படிக்க


Bigg Boss 7 Tamil: கமல் கேட்ட அந்த கேள்வி! அர்ச்சானவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ் - இன்றைய பிக்பாஸில்!


ABP Exclusive: 'அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி ஜன்னல்' ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலட்சியம்! அச்சத்தில் பயணிகள்!


Flood Relief: நிலைகுலைந்த சென்னை! வெள்ள நிவாரணம் ரூ.6,000 எப்போது கிடைக்கும்? அமைச்சர் உதயநிதி பரபரப்பு பதில்!