90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மஸ்குலர் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சரத்குமார் தனது திரைப்பயணத்தை வில்லனில் இருந்து தான் துவங்கினார். படிப்படியாக வாய்ப்புகள் பெற்று சூரியன் திரைப்படம் மூலம்  ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஆக்ஷன் படங்களில் கம்பீரமாக நடித்து வந்த சரத்குமார் ஏராளமான குடும்ப பாங்கான திரைப்படங்களிலும், குணச்சித்திர கேரக்டர்களிலும் வெவ்வேறு பரிணாமங்களை வெளிபடுத்தி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அவரின் நடிப்பில் வெளியான சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, சமுத்திரம் உள்ளிட்ட எவர்கிரீன் படங்கள் இன்று வரை கொண்டாடப்படுகிறது. இயல்பான நடிப்பால் இன்று வரை அட்டகாசமான படங்களாக தேர்ந்து எடுத்து கலக்கலாக நடித்து வருகிறார் சரத்குமார். 


 



பிஸியாக சுழலும் ராதிகா :


அவரின் மனைவி ராதிகா சரத்குமாரும் அசத்தலான நடிப்புக்கு பெயர் போன ஒரு நடிகை. சின்னத்திரை, வெள்ளித்திரை, தயாரிப்பு என என்றுமே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பிஸியாக சுழலும் ஒரு துணிச்சலான பெண்மணி. சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் அடிக்கடி குடும்பத்துடன், நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி விடுவார். 


 


திருமண நாள் கொண்டாட்டம் :


நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவை 2001ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர்களின் திரைப்பயணத்தை தனித்தனியே வெகு சிறப்பாக தொடர்ந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் கியூட் ரியல் ஜோடிகளான இவர்கள் நேற்று அவர்களின் 23 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள். இவர்கள் இருவருமே ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் அனைவருடனும் ஒற்றுமையாக எந்த ஒரு வேறுபாடும் இன்றி சந்தோஷமாக பயணித்து வருகிறார்கள். 


 






 


அந்த வகையில் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு நடிகை ராதிகா  சரத்குமார் அழகான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அலைபாயுதே படத்தில் தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க "இந்த பயணத்திற்காக விதி எங்களை ஒன்று சேர்த்தது. இந்த பாடல் அதற்கு கிக் ஸ்டார்ட் செய்தது. ஒரே தொட்டியில் இரண்டு செடிகள், ஒரே வேர் பிடித்து வளர முயற்சி செய்கிறது (சீன பழமொழி) என்றுமே உங்களை நேசிப்பேன்" என போஸ்ட் செய்துள்ளார். இந்த இனிமையான ஜோடிகளுக்கு வாழ்த்துக்களும் லைக்ஸ்களும்  குவிந்து வருகின்றன. 


 


மேலும் பார்க்க :  Lal Salaam Trailer: மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்.. பம்பாய்ல பாய் ஆளே வேற.. லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது