100 ரூபாய் நோட்டில் தொடங்கிய பயணம் எப்படி காதலர்களிடைய கண்ணாமூச்சி ஆடியது என்ற விளையாட்டுத்தனமான அழகான காதல் கதைதான் 2003ம் ஆண்டு வெளியான 'ஜே ஜே' திரைப்படம். சரண் இயக்கத்தில், பரத்வாஜ் இசையில், மாதவன் நடிப்பில் வெளியான இப்படம் இன்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  


 



வித்தியாசமான குடும்பம் :


சட்ட கல்லூரியின் முன்னாள் மாணவனாக சட்ட கல்லூரி ஹாஸ்டலிலும், அப்பா எம்.எல்.ஏ ஹாஸ்டலிலும், மகள் லேடீஸ் ஹாஸ்டலிலும் என மொத்த குடும்பமும் ஹாஸ்டலிலேயே தங்கி இருக்கும் ஒரு வித்தியாசமான குடும்பத்தை சேர்ந்த ஒரு வித்தியாசமான ஒரு ஜாலி இளைஞனாக மாதவன். பார்த்தவுடன் அவருக்கு ஹீரோயின் ஜமுனா (அமோகா) மீது காதல் ஏற்படுகிறது. 


100 ரூபாய் நோட்டு :


இருந்தாலும் விதி மீது ஒரு நம்பிக்கை வைத்து இருக்கும் ஹீரோயின் டீல் ஒன்றை போடுகிறார்.  அதாவது ஒரு 100 ரூபாய் நோட்டில் தனது பெயரையும் விலாசத்தையும் எழுதி, ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அந்த 100 ரூபாய் நோட்டு நம் கையில் கிடைத்தால் நாம் நிச்சயமான திருமணம் செய்து கொள்ளலாம் என்பது தான் அந்த டீல். இது தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதுசான ஒரு டைப் என்பதால் இளைஞர்களை மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 


 



பிளஸ் பாயிண்ட்:


படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரை ஹீரோ ஹீரோயினை காட்டிலும் ரசிகர்களுக்கு தான் அந்த 100 ரூபாய் நோட்டு அவர்களிடத்தில் கிடைக்க வேண்டும் என டென்ஷனாக இருந்தார்கள். காதல் ஜோடிகள் இருவருமே திரையில் ஒன்றாக இணைந்து நடித்தது ஒரு அரைமணி நேரம்தான் என்றாலும் படம் முழுக்க ஒரு காதல் மயமாக ரொமான்டிக்காக நகர்த்தபட்டு இருக்கும். அதனால் ரசிகர்களுக்கு சற்றும் ஸ்வாரஸ்யம் குறையாமல் படம் இருந்தது ஒரு பிளஸ் பாயிண்ட். 


பரத்வாஜ் இசை :


காதல் ஜோடிகளுடன் சேர்ந்து படம் முழுக்க அந்த 100 ரூபாய் நோட்டும் டிராவல் செய்து இருக்கும். ஒரு தலையாக பூஜாவின் காதல் ட்ராக் ஒரு பக்கம் அடிக்கடி வந்து போனது. 'ஜே ஜே' படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது இசையமைப்பாளர் பரத்வாஜ் இசை மற்றும் இயக்குநர் சரணின் திரைக்கதை இயக்கம். "உன்னை நான்", "உன்னை நினைக்கவே", "காதல் மழையே", "பெண் நெஞ்சை", "மே மாசம்" என படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் தித்திக்கும் ரகம். 


கொல்கத்தாவின் அழகு :


இந்த திரைக்கதையை எந்த ஒரு இடத்திலும் பிசிறு தட்டாமல் இறுதி வரை அந்த விறுவிறுப்பை தக்கவைத்து இருந்தார். படத்தில் நடித்த நடிகர்கள் என அனைத்துமே படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தது. படத்தின் ஹீரோயின் அமோக மெழுகு சிலை போல வந்து திரையை அலங்கரித்தனர். கொல்கத்தாவை சுற்றிலும் நகரும் இந்த கதைக்களத்தில் கொல்கத்தாவின் அழகு மிக அழகாக காட்சிப்படுத்தி இருந்தது. இந்த முழுநீள ரொமான்டிக் காதல் படம் என்றுமே ரசிகர்களை கவர்ந்து இழுக்கும்.