மகா சிவராத்திரி வாழ்த்து தெரிவித்து நடிகை சாரா அலி கான் பகிர்ந்த பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


சைஃப் அலி கானின் மகள்


நடிகர் சைஃப் அலி கானுக்கும் அவரது முதல் மனைவியான அம்ரிதா சிங்குக்கும் பிறந்த சாரா அலி கான், 2018ஆம் ஆண்டு கேதர்நாத் படம் மூலம் அறிமுகமானார்.




இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட்டரான மன்சூர் அலி கான் பட்டௌடி - நடிகை ஷர்மிளா தாகூர் தம்பதிக்கு பிறந்தவரான சைஃப் அலி கானின் மகளான சாராவுக்கு பாலிவுட்டில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


மற்றொரு புறம் இஸ்லாமிய தந்தைக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த அன்னைக்கும் பிறந்த சாரா இந்து மத வழிபாடுகளில் தீவிர ஈடுபாடு கொண்டு தொடர்ந்து பக்தி சுற்றுலாக்கள் மேற்கொண்டு புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.


சிவராத்திரி ஃபோட்டோ


அந்த வகையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு சிவ பக்தையான சாரா இன்ஸ்டாவில் புகைப்படங்களுடன் பதிவிட்ட நிலையில், இந்தப் பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


கேதர்நாத் கோயிலில் பக்திமயமாக சிவனை வழிபட்ட புகைப்படங்களை சாரா பகிர்ந்த நிலையில், இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட சாரா எப்படி இவ்வாறு பதிவிடலாம் என கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.




இஸ்லாமிய தந்தைக்குப் பிறந்து இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட சாரா எப்படி இவ்வாறு பதிவிடலாம் என கமெண்ட்டுகள் பகிரப்பட்டு வருகின்றன.


மற்றொரு புறம் இந்து அன்னைக்கும் பாட்டிக்கும் பிறந்த சாரா இப்படி செய்வதில்லை தவறில்லை. எந்தக் கடவுளை சாரா வழிபட வேண்டும் என்பது அவரது தேர்வு என்றும் மற்றொரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர்.




இதே போல் முன்னதாக சாரா அலி கான் தன் தோழியும் நடிகையுமான ஜான்வி கபூருடன் ஆன்மிக சுற்றுலா சென்றபோதும் இதேபோல் எதிர்ப்பு கிளம்பியது.


முன்னதாக சாரா அலி கான் தன் முன்னாள் காதலரான நடிகர் கார்த்திக் ஆர்யனை மீண்டும் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.


மீண்டும் நடிகருடன் காதல்


2020ஆம் ஆண்டு சாரா அலி கான் - கார்த்திக் ஆர்யன் இருவரும் ’லவ் ஆஜ் கல் 2’ படத்தில் நடிக்கும்போது காதலில் விழுந்தனர். ஆனால் இருவரும் தங்கள் உறவு குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனினும் இந்த இளம் ஜோடியை பாலிவுட் வட்டாரங்கள் கொண்டாடித் தீர்த்தன.


ஆனால் லவ் ஆஜ் கல் 2 படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இந்த ஜோடி சில மாதங்களில் ப்ரேக் அப் செய்ததுடன், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சாராவும் கார்த்திக் ஆர்யனும் டேட் செய்ததாக கரண் வெளிப்படையாக தெரிவித்தார். 


இந்நிலையில், ராஜஸ்தான், உதய்பூரில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் அள்ளின.