மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான  ‘கேதார்நாத்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாரா அலிகான். இந்தப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங்குடன் இவர் இணைந்த சிம்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.


 






தொடர்ந்து கார்த்திக் ஆர்யான் நடித்த லவ் ஆஜ் கல் படத்தில் நடித்த அவர், வருண் தவான் நடித்த  ‘கூலி நம்பர் ஒன்’ படங்களில் நடித்தார். இறுதியாக தனுஷ் அக்சய்குமார் நடித்த ‘அத்ராங்கி ரே’ படத்தில் நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு கவனிக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சாரா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். இந்தநிலையில் அவர் அண்மையில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் இதுவரை நீங்கள் செய்ததில் மோசமான ப்ராங் எது என்று கேட்க, அதற்கு பதிலாக ஜாரு என்பவரை ஸ்விம்மிங் ஃபுலில் தள்ளிவிட்ட வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.