மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்தானத்தின் 'SANTA 20' படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கியமான பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் (கே. ஜே. கணேஷ்) மற்றும் K 7 ஸ்டுடியோஸ் (விஜய் கே செல்லையா)  ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படம் மர்மம் -சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் அற்புதமான கலவையைக் கொண்ட புதிய கால பயணத்தை அடிப்படையிலான துப்பறியும் கதையாகும். 

Continues below advertisement

'SANTA 20 'திரைப்படம் ஒரு துப்பு துலக்கும் நிபுணரை மையப்படுத்தி தயாராகிறது. அவர் ஒரு குற்றத்தை கண்டறிய தொடங்குகிறார். இது அவரை எதிர்பாராத வகையில் சாகசமும் , சிலிர்ப்பூட்டும் பயணத்திலும் ஆழ்த்துகிறது. 

இந்தப் படத்தில் சந்தானத்துடன் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் மற்றும் ஃபௌஸி உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் நடிக்கிறார்கள். 

Continues below advertisement

வலிமையான தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்புடன் SANTA 20 காட்சி ரீதியாகவும் வளமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

நடிகர்கள் : சந்தானம், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் மற்றும் ஃபௌஸிஇயக்குனர் : சுதாமன் கிருஷ்ணாஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம். நாதன் இசை : நிவாஸ் கே. பிரசன்னா தயாரிப்பாளர்கள் : கே ஜே கணேஷ் - விஜய் கே செல்லையா கலை இயக்கம் : ஜாக்கி சண்டை பயிற்சி:  திலீப் சுப்பராயன் ஆடை வடிவமைப்பு : பிரியா ரவி படத்தொகுப்பு : கே. எல். பிரவீண் நிர்வாக தயாரிப்பாளர் : கார்த்திக் ஆனந்த கிருஷ்ணன் இணை நிர்வாக தயாரிப்பு : எழில் VFX மேற்பார்வை : G.E. அசோக் குமார் - Gலோகராஜ் மார்க்கெட்டிங் : விஜயராகவன் .ஆர் ( தி பிராண்ட் மேக்ஸ் )மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 மீடியா) 

'யாத்திசை ' மற்றும் 'குமார சம்பவம்' போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களை வழங்கிய வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் இந்த ஈர்க்கக்கூடிய கதையை K7 ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. இவர்கள் தமிழ் சினிமாவின் தனித்துவமான கதை சொல்லலுடன் கூடிய பொழுதுபோக்கு நிறுவனங்களின் பட்டியலில் புதிய சேர்க்கையை உருவாக்க உள்ளனர்.‌

தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சந்தானத்தின் திரைப்பயணத்தில் மிகவும் சுவாரசியமான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக SANTA 20 மாற உள்ளது.