தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குளிர் குறைந்து வெப்பம் அதிகரிக்கக் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகாலையில் லேசான பனிமூட்டம் இருந்து, பின்னர் படிப்படியாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுகின்றனர். இன்னும் செல்ல செல்ல வெப்பம் அதிகரித்து வெயில் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வேலூர், கரூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கரூர் பரமத்தி மற்றும் ஈரோட்டில் தலா 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாகவும் கூறியுள்ளது. இன்றைய வானிலை அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
