டிடி ரிடர்னஸ்


பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்லுக்கு துட்டு படத்தின் 3-வது பாகம் டி டி ரிட்டர்ன்ஸ்.


படத்தின் கதை


முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா.. அங்கே சூதாட்டத்தை தொழிலாகக்கொண்டு போட்டியில் தோற்பவர்களை கொலை செய்யும் குடும்பத்தினர் ஊர் மக்களால் எரித்து கொல்லப்படுகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையில் படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் பங்களாவில் தஞ்சம் புகுகின்றனர்.


பேய் படத்தில் லாஜிக் பார்க்க்கூடாது என்ற விதி உண்டு. அதனை மறந்து விட்டு படம் பார்த்தால் சிரிப்பு சரவெடிதான். ஆங்காங்கே டைமிங் டயலாக்குகளும் அப்ளாஸ் அள்ளுகிறது. சந்தடி சாக்கில் அரசியல்வாதிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பகடி செய்கிறார்கள். ஆக மொத்தம் பேய் கான்செப்டில் சந்தானம் மீண்டும் ஒரு சூப்பரான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.


முதல் நாள் வசூல்




சந்தானம்  நடிப்பில் வெளியான முந்தைய இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் டி.டி ரிடர்ன்ஸ்  படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்திருக்கிறது.  முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் மொத்தம் 2 கோடி ரூபாய் வசூல் செய்தது டி.டி ரிட்டர்ன்ஸ்.


இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக 3.5 கோடிகளையும்  மூன்றாவது  நாளாக 4.3 கோடிகளையும் வசூல் செய்து மூன்றே நாட்களில் மொத்தம் 10 .1 கோடி வசூல் ஈட்டியுள்ளது டி.டி.ரிடர்ன்ஸ் படம். எப்போதெல்லாம் சந்தானத்திற்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தில்லுகு துட்டு அவரை காப்பாற்றி வருகிறது.


சரியும் தோனியின் எல்.ஜி.எம்




தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு  நடிப்பில் வெளியாகி உள்ள படம் லெட்ஸ் கெட் மேரீட். காதலர்கள் திருமணம் என்கிற கட்டத்துக்குள் நுழையும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் எல்.ஜி.எம். தோனி தயாரிப்பில் வெளியாகும் முதல் படம் என்பதால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் படம் சுமாரான விமர்சனங்களைப்  பெற்றதால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.


முதல் நாளில் 85 லட்சம் வசூல் செய்த எல்.எஸ்.ஜி. இரண்டாவது நாளாக சற்று முன்னேறி 1 கோடி வசூல் செய்தது. டி.டி. ரிடர்ன்ஸ் படத்திற்கு அதிகரித்து வந்த பாராட்டுக்களால் எல்.ஜி.எம் படத்தின் மூன்றாம் நாள் வசூல் பாதிப்படைந்துள்ளது. மூன்றாவது நாளாக வெறும் 90 லட்சங்களை வசூல் செய்துள்ளது படம். தற்போதைய நிலைக்கு சந்தானமே முன்னிலையில் இருக்கிறார்.