நான் இங்கு ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வந்து நிற்பதற்கு சந்தானமே முக்கிய காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
இது குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, “ நான் இங்கு ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வந்து நிற்பதற்கு சந்தானமே முக்கிய காரணம். எப்போதும் அவர் என் நண்பேண்டா, பார்த்தா. சந்தானம் போன் செய்து ‘குலுகுலு’ படத்தை தமிழ்நாட்டில் விநியோகித்து தருமாறு கேட்டார். நான் உடனே ஓகே என்று சொன்னேன். உடனே ரெட் ஜெயிண்ட் லோகோ வருமா என்றார். உடனே படம் பார்க்காமல் நான் அதை செய்வதில்லையே என்று சொல்லிவிட்டு, இயக்குநர் யார் என்று கேட்டேன்.
உடனே அவர் ரத்னகுமார் என்றார். உடனே அவன் நல்ல படம்தான் எடுப்பான். லோகோ போட்டுவிடலாம் என்றேன். இரவே படத்தையும் பார்த்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தில் சந்தானம் தாண்டி அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். சந்தானம், ரத்னகுமார், தயாரிப்பாளரும் எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக சந்தானத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும்.” என்று பேசினார்.
மேயாத மான், ஆடை ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும்,கைதி மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் லோகேஷூடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனத்தில் பங்கு கொண்டவருமான ரத்னகுமார் தற்போது இயக்கி இருக்கும் திரைப்படம் குலு குலு. பிரபல நடிகர் சந்தானம் நடித்துள்ள இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியவரும், நடிகருமான உதயநிதி இவ்வாறு பேசினார். இந்தப்படம் வரும் ஜூலை 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.