டிடி நெக்ஸ்ட் லெவல் ஓடிடி ரிலீஸ்
சந்தானம் நடித்து கடந்த மே 16 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இதற்கு முன்பாக வெளியான தில்லுக்கு துட்டு , டிடி ரிடர்ன்ஸ் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதேபோல் ஹாரர் காமெடி ஜானரில் உருவான படம்தான் டிடி நெக்ஸ்ட் லெவல். எல்லா படங்களுக்கும் கடுமையான விமர்சனங்களை வழங்கும் ரிவியுவரை ஒரு படத்திற்குள் மாட்டவைக்கிறது பேய். இந்த படத்திற்குள் நடக்கும் காமெடி ரகளைதான் படத்தின் மையக் கதை. முந்தைய இரு பாகங்களைப் போல் இல்லாமல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது டிடி நெக்ஸ்ட் லெவல். திரையரங்கைத் தொடர்ந்து தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
அதன்படி வரும் ஜூன் 13 ஆம் தேதி ஜீ5 தளத்தில் டிடி. நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக இருக்கிறது.
டிடி நெக்ஸ்ட் லெவல் படக்குழு
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளது 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' இப்படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார்.