எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் மூலமான இணைய சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தை கடந்த வாரம் பெற்றது. அதைத் தொடர்ந்து, இன்னும் 2 மாதங்களுக்குள் இந்தியாவில் அதன் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அதன் விலை விவரங்களும் வெளியாகியுள்ளன. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தியாவில் இணைய சேவை வழங்க உரிமம் பெற்ற ஸ்டார் லிங்க்
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் உறுதியான தகவல்கள் வெளியானது. இதே போன்ற விண்ணப்பத்தை அளித்திருந்த யூடெல்சாட்டின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிற்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் மாறியது.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் உறுதியான தகவல்கள் வெளியானது. இதே போன்ற விண்ணப்பத்தை அளித்திருந்த யூடெல்சாட்டின் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிற்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் மாறியது.
கடந்த 2022-ம் ஆண்டு முதல், இந்தியாவில் வணிக ரீதியாக செயல்படுவதற்கான உரிமத்திற்காக ஸ்டார்லிங்க் காத்திருந்தது. ஆனால், தேசிய பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட காரணங்களால் உரிமம் வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டன. செயற்கைக்கோள் சேவைகளுக்கு எவ்வாறு அலைக்கற்றையை வழங்குவது என்பது தொடர்பாக, மஸ்க்கின் நிறுவனம், சில மாதங்களாக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோவுடன் மோதல் போக்கில் இருந்துவந்தது. அலைக்கற்றைகள் ஏலம் விடப்படாமல், ஒதுக்கீடு முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதில், இந்திய அரசாங்கம் மஸ்க்கின் பக்கம் சாய்ந்த நிலையில், ஸ்டார்லிங்கிற்கு குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் பை சேட்டிலைட்(GMPCS) உரிமம், தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவைக்கான விலை என்ன.?
ஸ்டார்லிங்க இந்தியாவில் சேவைகளை வழங்க உரிமம் பெற்ற நிலையில், இன்னும் 2 மாதங்களுக்குள் தனது சேவைகளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்டார்லிங்க் சேவையை பெற, முதலில் அதன் கருவியை 33,000 ரூபாய் செலுத்தி பயனாளர்கள் வாங்க வேண்டும். அதன் பின்னர், மாதம் 3,000 ரூபாயில் அன்லிமிடெட் சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் முதன் முறையாக இந்தியாவில் சேவையை தொடங்குவதால், அதன் டிஷ்-ஐ வாங்கும் வாடிக்கையாளருக்கு, ஒரு மாத இலவச சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்கின் இந்த கட்டணங்கள் வீட்டு பயனாளர்களுக்கு சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. தடையில்லாத அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் என்பதால், நிறுவனங்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும். வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும் பயனளிக்கும் என்றாலும், விலை சற்று அதிகம் என்றே தொன்றுகிறது. அதிலும், நடுத்தர குடும்பங்கள் டிஷ் வாங்குவதற்கு 33,000 ரூபாய் செலவு செய்வார்களா என்பது கேள்விக்குறியே.!!