பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், 2020ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனினும், உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் மருத்துவ உதவியுடன் மீண்டு வந்தார்.






தந்தையுடன் முதல் படம்:


சஞ்சய் தத்தின் முழு பெயர் சஞ்சய் பால்ராஜ் தத். இவரது பெற்றோர்கள் செய்தித்தாள் பத்தியில் இருந்து இவரது பெயரைத் தேர்வு செய்தார்களாம். சஞ்சய் சிறுவயதில் இருந்தே நடிக்க விரும்பினார், ஏனென்றால் அவர் மேலும் படிக்க விரும்பவில்லை, மேலும் நடிப்புதான் எளிதான வேலை என்று அவர் நம்பினார். அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் போன்று தானும் உடலை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். முன்னா பாய் M.B.B.Sதான் சஞ்சய் தத் தனது தந்தை சுனில் தத்துடன் நடித்த முதல் படம்.


இந்நிலையில் அவருக்கு 2020 ஆம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனினும், உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் மருத்துவ உதவியுடன் மீண்டு வந்தார். கடந்த வாரம் சஞ்சய் தத்தும் அவரது சகோதரி பிரியா தத்தும் இணைந்து மருத்துவமனையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


புற்றுநோய் போராட்டம்:


அப்போது தனது புற்றுநோய் போராட்டம் பற்றி சஞ்சய் தத் மனம் திறந்து பேசினார். இது குறித்து அவர், எனக்கு ஆரம்பத்தில் முதுகு வலி கடுமையாக இருந்தது. அப்போது சுடுதண்ணீர் ஒத்தடம், பெயின் கில்லர்கள் சாப்பிடேன். ஒருநாள் திடீரென்று என்னால் மூச்சுவிடவே முடியவில்லை. உடனே என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் எனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அதை எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் அப்படியே வெளிப்படையாக சொன்னார்கள். அப்போது நான் தனியாக வேறு இருந்தேன். என்னிடம் ஒரு மருத்துவர் வந்து எனக்கு புற்றுநோய் இருக்கிறது என்றார். நான் நடுங்கிப் போனேன்.


குடும்பத்திற்கே புற்றுநோய்:


என் மனைவி துபாயில் இருந்தார். இந்தத் தகவல் குடும்பத்திற்கு தெரிந்தது. உடனே பிரியா தத் என்னைக் காண வந்தார். இது மாதிரியான மோசமான நோய் பற்றி உங்களிடம் யாராவது சொன்னால் உங்களுக்கு உடனே அதன் நிமித்தமான அனுபவங்கள் இருந்தால் அதுதான் முதலில் நினைவுக்கு வரும். அப்படித்தான் எனக்கும் வந்தது. என் தாயார் கணையப் புற்றுநோயால் இறந்தார். என் மனைவி மூளையில் புற்று நோய் ஏற்பட்டு இறந்தார். அதனால் நான் உடனே மருத்துவரிடம், எனக்கு கேன்சர் என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் தயவுசெய்து எனக்கு கீமோதெரபி செய்யாதீர்கள். உயிரிழப்பது என்றாலும் நான் சிகிச்சை இல்லாமல் இறக்கிறேன் என்றேன். 


அப்போதுதான் ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் எனகு சேவாந்த் லிமாயே மருத்துவரை அறிமுகப்படுத்தினார். அது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. என் குடும்பத்தினர் என்னை நினைத்து கலங்கினர். அப்போது எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. நான் நொறுங்கிப் போனாலோ உடைந்து போனோலோ என்னால் குடும்பத்தினர் அனைவரும் சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்தேன். அதனால் நான் உடனே உத்வேகத்துடன் நோயை எதிர்த்து போராட ஆரம்பித்தேன்.


பொதுவாக நடிகர்கள் தஙகளின் தொழில் எதிர்காலம் கருதி நோய் பற்றி பேசுவதில்லை. ஆனால் நான் இங்கே இதை வெளிப்படையாகக் கூற காரணம் என்னால் யாரேனும் சிலராவது நன்மை அடையலாம் என்பதே என்றார்.