இந்தி சினிமாவில் பிரபல நடிகராக திகழும் சஞ்சய் தத் மதுபானம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பிரபலங்கள் பிற துறைகளில் முதலீடு செய்வது ஒன்றும் புதிதல்ல. ரியல் எஸ்டேட் தொடங்கி ஏகப்பட்ட நிறுவனங்கள், துறைகளில் அதனை முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சஞ்சய் தத், இந்தியாவில் மதுபான வகைகளை இறக்குமதி செய்வதற்கும், சில்லறை விற்பனை செய்வதற்கும் அல்கோபெவ் ஸ்டார்ட்அப் கார்டெல் & பிரதர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது பாலிவுட்டில் பேசு பொருளாக உள்ளது.
மதுபான நிறுவனங்கள் இதற்கு முன்னால் ஸ்டிங், ஜான் பான் ஜோவி , எம்மா வாட்சன், டுவைன் ஜான்சன், கேட் ஹட்சன்,புருனோ மார்ஸ் ஆகிய பிரபலங்கள் மதுபான உற்பத்தியில் களமிறங்கியுள்ளனர். இவர்கள் நிறுவன பிராண்டுகளுக்கு சந்தைகளில் ஏகப்பட்ட கிராக்கி உள்ளது. அந்த பட்டியலில் புதிதாக சஞ்சய் தத் இணைந்துள்ளார் அவ்வளவு தான்.
இதனைத் தொடர்ந்து அல்கோபெவ் ஸ்டார்ட்அப் கார்டெல் & பிரதர்ஸில் முதலீடு செய்து தி க்ளென்வாக் என்ற ஸ்காட்ச் விஸ்கியை சஞ்சய் தத் அறிமுகம் செய்துள்ளார். க்ளென்வாக் விஸ்கி ஸ்காட்லாந்தில் தயாரிக்கப்படுகிறது. இதில் இந்திய தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஸ்காட்ச்சின் உண்மையான சுவைக்கு உத்தரவாதம் அளிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் விலை 1,550 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் தத், “இந்திய நாட்டில் விஸ்கிக்கு ஒரு பெரிய சந்தை உள்ளது. உலகளவில் இந்தியா மிகப்பெரிய விஸ்கி நுகர்வோர்களை கொண்டுள்ளது. நான் இளம் வயதில் இருந்தபோது தனிப்பட்ட முறையில் விஸ்கியுடன் மது பயணத்தைத் தொடங்கினேன். amber பிராண்டை நண்பர்களுடன் பதுங்கியிருந்து குடித்தது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.
மேலும், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பது மிக நீண்டகால சிந்தனையாக இருந்தது. விஸ்கி குடிப்பதற்கு சாஃப்டாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அதேபோல் சரியான விலையில் இருக்க வேண்டும். அப்போது தான் அனைவரும் எளிதாக அணுகக் கூடியதாக இருக்க வேண்டும் என நினைத்து அந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.