விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 90களின் கதாநாயகிகள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
ரியாலிட்டி நிகழ்ச்சி என்று சொன்னாலே, அதில் நாங்கள்தான் நம்பர் ஒன் இடம் என்ற அளவிற்கு வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி ஒளிபரப்பு செய்து வருகிறது ஸ்டார் விஜய் தொலைக்காட்சி. இசையையும் நகைச்சுவையையும் ஒரு சேர கலந்து கொடுக்கும் நிகழ்ச்சியாக மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளது ஸ்டார்ட் மியூசிக். பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வரும் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் நடைப்பெற்று வருகிறது.
இதில் வாரவாரம் பல சினிமா பிரபலங்கள் அல்லது சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொள்வது வழக்கம். செப்டம்பர் 3 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்ட கடந்த வார எபிசோடில், 90களின் கதாநாயகிகளான ஸ்ரீதேவி விஜயகுமார், கருத்தம்மா புகழ் மகேஸ்வரி ஒரு அணியிலும் அவர்களுக்கு எதிராக மீனா, சங்கவி மற்றொரு அணியிலும் பங்குபெற்றனர்.
முதல் ரவுண்ட் போட்டி :
செளண்ட் பார்ட்டி எனும் முதல் ரவுண்டில், பின்னணி இசை ப்ளே செய்யப்படும். அது என்ன பாடல் என கண்டுபிடித்த அணி பசர்ரை அழுத்தி பதில் கூற வேண்டும். முதல் பாடலாக கருத்தம்மாவில் வரும் தென்மேற்கு பருவக்காற்று ப்ளே ஆனது. பின், இரண்டாவதாக கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா பாடலின் பின்னணி இசை ஒலிக்கப்பட்டது. ஸ்ரீதேவி - மகேஸ்வரி தவறாக பதில் சொன்னதால் எதிரணிக்கு 1 பாய்ண்ட் கிடைத்துவிட்டது.
பின் உற்சாகத்துடன், அவர் நடித்த படத்தின் பாடலுக்கு நடனமாடினார் சங்கவி. பின் தொகுப்பாளர் ப்ரியங்கா, “விஜய் சார் கூட நடிச்சிருங்கீங்க..” என்று சொன்னவுடன் அங்கிருக்கும் ஆடியன்ஸ் ஆராவாரமாக கத்தினர். பின் சங்கவி, “ இந்த பாடலுக்கு முன் தேதி பார்த்தாள் என்ற பாடல் வரும். அதில் முகத்தில் நெருப்பு க்ராஸ் ஆகும் சீன் வரும், அப்போது விஜய் சேலையை இழுக்கும் போது கோவத்தில் நான் அவரை அரைய வேண்டும். நாங்கள் இந்த காட்சியை பல முறை படம் பிடித்தோம். அது சரியாக வரவில்லை. நெருப்பு எரிய மண்ணெண்ணெய் பயன்படுத்தினர். அதனால் நெருப்பு கொளுந்துவிட்டு எரிந்தது. அந்த பயத்தில் அவர் கன்னத்தில் பளிர் என்று அறைந்துவிட்டேன். அப்போது விஜய் என்னிடம் கூறினார். காதில் சத்தம் வரும் என்று சொல்வார்கள். நீங்கள் அடித்த அடியில் அதை நான் அனுபவித்துவிட்டேன். இப்போது வரை உங்களின் நல்ல நண்பர் யார் என்று என்னை யாராவது கேட்டால், நான் அவரைதான் சொல்வேன்.” என விஜய் பற்றிய பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
ஸ்டார்ட் மியூசிக் :
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் இது, 9:30 மணியளவில் நிறைவு பெரும் 1:30 மணிநேர நிகழ்ச்சியாகும். டிஸ்னி பிளஸ் ஹார்ட் ஸ்டாரில், இதை எங்கும் எப்போதும் காணலாம்.
மேலும் படிக்க : Vetrimaran Birthday: கலை எனும் ஆடுகளத்தில் அவன் அசுரன்.. பிறந்தநாள் வாழ்த்துகள் வெற்றிமாறன்...