டாடா நெக்ஸான் ஃபேஸ் லிப்ட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் இன்று தொடங்குகிறது. 


ஃபேஸ்லிப்ட் கார்கள்:


ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் தொடர்ந்து புதுப்புது கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெறும் கார்கள் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்புகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்படும் கார்கள் ஃபேஸ்லிப்ட் வேரியண்ட் என குறிப்பிடப்படுகிறது. அந்த வகியில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மாடலின் புதிய ஃபேஸ்லிப்ட் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான முன்பதிவு ஆன்லைன் தளங்களில் இன்று தொடங்குகிறது.


நெக்ஸான் ஃபேஸ்லிப்ட்:


சப் 4 மீட்டர் SUV செக்மென்ட்டில் இடபெறும் புதிய காரானது  Smart, Smart+, Smart+ (S), Pure+, Pure+ (S), Creative, Creative+ (S), fearless, Fearless (S) மற்றும் Fearless+ (S) என மொத்தம் 11 வேரியண்ட்களில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கும் நிலையில், மாத இறுதியில் இருந்து விநியோகம் தொடங்குகிறது. காருக்கான முன்பதிவு தொகை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம், புதிய காரின் விலை ரூ.8.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கார் வேரியண்டிற்கு ஏற்ப இந்த விலை மாறுபடும் என என தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்ஜின் விவரங்கள்:


ஏற்கனவே இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் புதிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிப்ட் வேரியண்ட் வெளியாகியுள்ளது. அதன்படி,  ஒரு 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வசதி, 120 BHP பவர் மற்றும் 170 NM டார்க் திறனுடன் வருகிறது. அதேபோல 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கார் 115 BHP பவர் மற்றும் 160 NM டார்க் திறனை வெளிப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம்,  புதியதாக 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் வசதி, 6 ஸ்பீட் மேனுவல், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக், 7 ஸ்பீட் DCT கியர் ஆகிய 4 டிரான்ஸ்மிஷன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.


வடிவமைப்பு:


புதிய ஃபேஸ்லிப்ட் காரின் டிசைன் பெருமளவு Tata Curv கான்செப்ட் கார்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அளவை பொறுத்தவரை தற்போது இருக்கும் நெக்சான் காரை போன்றே அளவு கொண்டுள்ளது. அதேநேரம்,  கூடுதலாக ஸ்போர்ட்டி டிசைன், ஷார்ப் லைன்ஸ், புதிய வகை எல்.ஈ.டி., முகப்பு விளக்குகள், எல்.ஈ.டி., DRLS, புதிய ஸ்ப்ளிட் லைட், பெரிய போல்ட் கிரில், கிரோம் கார்னிஷ் கொண்ட பம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.


சிறப்பம்சங்கள்:


பெரிய 10.25 இன்ச் பிலோட்டிங் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் வசதி, Tata iRA கனெக்ட், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி, டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளன. கேபினில் டேஷ்போர்டு, 2 ஸ்போக் பிளாட் பாட்டம் ஸ்டேரிங் வீல், மவுண்ட் டச் கன்ட்ரோல், பிரீமியம் கார்களில் இருப்பது போன்ற இலுமினேட் செய்யப்பட்ட டாடா லோகோ வழங்கப்பட்டுள்ளன.  ஸ்லீக் AC வென்ட்ஸ், நெக்சான் மின்சார காரில் இருப்பது போன்ற ஸ்லீக் கியர் லிவர், மேம்படுத்தப்பட்ட அபோல்ஸ்ட்ரி மற்றும் பல இன்டீரியர் கலர் தீம் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.  காரில் 360 டிகிரி கேமரா வசதி, வென்டிலேட் செய்யப்பட்ட சீட், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையிலான இருக்கை, வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், எலக்ட்ரிக் சன் ரூப், கிருஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் இருக்கின்றன.


யாருக்கு போட்டி:


இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக நெக்ஸான் இருக்கிறது. Global NCAP பாதுகாப்பு சோதனையில் 5-க்கு 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. 6 ஏர் பேக் வசதி, முன்பக்க பார்க்கிங் சென்சார் வசதி, ISOFIX சீட் மவுண்ட், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் (ESC) ஆகியவை உள்ளன. இந்த கார் விற்பனைக்கு வரும்போது ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, மாருதி சுசூகி பிரெஸ்ஸா மற்றும் கியா சோனெட்  ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI