தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மீது பயங்கர கோபத்துடன் ரகுராம் காலேஜ் வர, ஒரு விதவைப்பெண் பேசிய விஷயத்தைக் கேட்டு மனம் மாறி மாயாவுக்கு ஆதரவாக பேசிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, ரகுராம் மாயாவுக்கு ஆதரவாகப் பேச, தனம் ஆச்சரியத்துடன் நிற்கிறாள். அதன் பிறகு ரகுராம் மாயா மற்றும் தனத்தை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறார். காரில் வரும் போதும் நீங்க பண்ணதுல எந்த தப்பும் இல்லை என்று சொல்ல, மாயா ஆச்சரியமடைகிறாள். ரகுராம் மீது நல்ல எண்ணமும் வருகிறது. 


மறுபக்கம் ஜானகி ரகுராம் இனிமே மாயா இந்த வீட்டில இருக்கவே கூடாது, அவ துணையையெல்லாம் மூட்டை கட்டி வை என்று சொல்லி கிளம்பியதை நினைத்து நினைத்து வருத்தப்படுகிறாள். மாயாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை எப்படித் தடுப்பது என யோசிக்கிறார். 


இந்த நேரம் பார்த்து ஜானகி அருகே வரும் ரமணி பாட்டி தனம் வழி தவறிப் போனதையும் அவளை மாயா காப்பாற்றிய விஷயத்தையும் நினைத்துப் பார்க்கிறாள். ஜானகியிடம் “மாயாவை பார்த்துக்கணும்னு நீ உன் பொண்ணை பார்த்துக்க தவறிட்ட” என்று சொல்ல, அதைக் கேட்டு ஜானகி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா


RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் - ஆர்.ஜே.பாலாஜி