2002-ஆம் ஆண்டில் வெளியான மைனே தில் துஜ்கோ தியா எனும் இந்தி திரைப்படம் மூலம் அறிமுகமாகி திரையுலகிற்குள் நுழைந்தவர் சமீரா ரெட்டி. பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். கடந்த 2003-ஆம் ஆண்டில் வெளியான தர்ணா மனா ஹை, 2004-ஆம் ஆண்டில் வெளியான முசாஃபிர், 2005-ஆம் ஆண்டில் வெளியான ஜெய் சிரஞ்சீவா போன்ற படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர். தமிழில் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்திலும் பின்பு வேட்டை, வெடி, நடுநிசி நாய்கள் போன்ற படங்கள் மூலம் சூர்யா, விஷால், மாதவன் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஹன்ஸ் வர்தே எனும் மகன் இருக்கிறார். இந்த நிலையில் சமீரா ரெட்டி இரண்டாவதாக ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். அவரின் சின்ன தேவதைக்கு நைரா என்று பெயரிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்கள் இடுவது வழக்கம். அவர் எப்போது பதிவிட்டாலும், அதில் அவரது வயதான தோற்றத்தை கண்டு நெட்டிசன்கள் ஏதாவது கமென்ட் செய்துகொண்டிருப்பார்கள். சமீராவும் அதற்கு ஏற்ற பதிலடி கொடுத்து வருவார். அது அவருக்கு வழக்கமாகவே இருந்தது. சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுருக்கிறார். அதில், தலைமுடியின் நரையை மறைக்காமல் விடுவதால், சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்கள் இழிவாக நினைக்கிறார்கள் என்று அவரது தந்தை வருத்தப்பட்டு தெரிவித்ததாக ஒரு உரையாடலை எழுதி அவருடைய நரை முடிகள் நன்றாக தெரியும்படி ஒரு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். Body Positivity என்னும் நேர்மறையான விஷயத்தை முன்னெடுப்பதில் சமீரா ரெட்டி சிரத்தை எடுத்துக்கொள்கிறார்
அந்த பதிவில், "ஏன் உனது வெள்ளை முடிகளை டை இட்டு மறைக்காமல் அப்படியே வைத்திருக்கிறாய் என்று என் தந்தை கேட்டார். பார்ப்பவர்கள் இழிவாக எண்ணுவதால் வருத்தம் அவருக்கு. அதற்கு நான் சொன்னேன், அவர்கள் அப்படி நினைத்தால் எனக்கு என்ன, அதனால் நான் வயதானவள் ஆகிவிடுவேனா? அழகில்லாதவள் ஆகி விடுவேனா? பார்ப்பவர்கள் கூறுவதை நான் மதிப்பதில்லை, அது என்னை கொஞ்சமும் பாதிப்பதில்லை, அது எனக்கு பழகிப்போய் விட்டது. அது என் சுதந்திரமும் கூட. எனக்கு தோன்றினால் மட்டும் நான் கலர் செய்துசெய்வேன், என்றேன்" என்று எழுதியிருந்தார்.
சமீரா ரெட்டி கடைசியாக 2013-ஆம் ஆண்டு வரதநாயகா என்ற கன்னடப் படத்தில் நடித்தார். 2012 பிரகாஷ் ஜாவின் பொலிட்டிகல் த்ரில்லர் சக்ரவ்யூஹில் திரைப்படத்தில் மனோஜ் பாஜ்பாய், அர்ஜுன் ராம்பால் மற்றும் அபய் தியோல் ஆகியோருடன் நடித்திருந்தார்.