தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்தியாவில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகை நயன்தாராவும், திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்ட நிலையில் இருவருமே தங்களது பணியில் பரபரப்பாக இருந்து வருகின்றனர்.
ஆனாலும் குடும்ப நிகழ்விலும், குடும்பத்தினர் பிறந்தநாள் விழாக்களிலும் பங்கேற்று வருகின்றனர். அதன்படி தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நயன்தாரா கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விக்னேஷ் சிவனும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஓமன குரியான் அம்மு. உங்களுக்கும், உங்கள் பொன்னான மனதுக்கும் கடவுள் ஆசீர்வதிப்பார் என குறிப்பிட்டுள்ளார். நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்த நானும் ரெளடிதான் படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின்போது நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா தன் குடும்பத்தை பற்றி அதிகம் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டதில்லை. ஆனால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர் தன்னுடைய தந்தை குறித்து பேசினார். நான் நடிக்க ஆரம்பித்த 2,3 ஆண்டுகளிலேயே அப்பாவின் உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது. அப்பா இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். எனக்கு மட்டும் ஒரு விஷயத்தை மாற்றி அமைக்கும் சக்தி இருந்தால் நான் எனது அப்பாவை நான் சிறு வயதில் இருந்தபோது எப்படி இருந்தாரோ அப்படியே மாற்றிவிடுவேன்" என கூறினார்.