தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நடிகை சமந்தாவின் நடிப்பில், இறுதியாக வெளியான திரைப்படம்  ‘யசோதா’. இந்தப்படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சாகுந்தலம்’. இந்தப்படம் மகாகவி காளிதாஸ் எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காவியத்தில் வரும் சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார். மேலும் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ்,  கௌதமி, மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் உள்ளிட்ட பலரும் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள். குணசேகர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். 


ஏற்கனவே சாகுந்தலம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது; அதில் மான்கள், வெள்ளை மயில்கள், அன்னப்பறவைகளுக்கு நடுவே வெள்ளை தேவதையாய் சமந்தா இருக்கும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது; தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், முன்னதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், சாகுந்தலம் திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது; 


 






ஆனால் அதனைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில், படக்குழு படத்தை 3டி வடிவில் காட்சிப்படுத்த விரும்புவதாகவும், அதற்கான வேலைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், ஆகையால் சாகுந்தலம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறி அறிக்கை வெளியிடப்பட்டது. இதனிடையே அரிய வகை நோயான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்; இந்த நிலையில் தற்போது சாகுந்தலம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில்  “ சாகுந்தலம் படமானது வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது;