கிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின் சமந்தா நடித்து திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'எங்கள் தங்கம்' நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். சமந்தாவின் ட்ராலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. திகந்த் மஞ்சாலே கௌதமி தடிமல்லா சைதன்யா கிருஷ்ணாஸ்ரீமுகி ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி , குல்ஷன் தேவையா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அதிரடி ஆக்‌ஷன் கலந்த ஃபேமிலி என்டர்டெயின்மெண்டாக உருவாகியுள்ள எங்கள் தங்கம் திரைப்படம் சமந்தாவிற்கு கம்பேக் படமாக அமைந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் 

Continues below advertisement

எங்கள் தங்கம் கதை

தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் திகந்த் மஞ்சாலே. தனது தங்கையின் திருமணத்திற்காக மனைவி சமந்தாவுடன் சொந்த வீட்டிற்கு திரும்புகிறார். தனது புகுந்த வீட்டில் எப்படியாவது நல்ல பெயர் எடுக்க வேண்டும் என தனத் இயல்பிற்கு மீறிய எல்லா வேலைகளையும் சமந்த செய்து அவர்களின் மனதில் இடம்பிடிக்கிறார். ஆனால் இந்த மருமகள் வீட்டு வேலைகளில் மட்டுமில்லாமல் ஆக்‌ஷனிலும் மிரட்டக் கூடியவராக இருக்கிறார்.  குடும்பத்தினர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை அவர் பிடிக்கும் தருணத்தில் அவரது கடந்த காலம் அந்த குடும்பத்திற்கு ஆபத்தாக வந்து நிற்கிறது  சமந்தாவின் கடந்த காலம் என்ன ? இந்த ஆபத்தில் இருந்து தனது குடும்பத்தை சமந்தா எப்படி காப்பாற்றினார். அவரது உண்மை தெரிந்தபின் இந்த குடும்பம் அவரை ஏற்றுக்கொண்டதா என்பதே எங்கள் தங்கம் படத்தின் கதை

விமர்சனம் 

முதல் பாதி முழுவதும் சமந்தா இந்த குடும்பத்தை கைக்குள் கொண்டு வர  செய்யும் திருட்டுத்தனங்கள் என நகைச்சுவையாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதி முழுக்க ஃபேமிலி செண்டிமெண்ட் , ஆக்‌ஷன் என தொடர்கிறது. ஆனால் செண்டிமெண்ட் காட்சியோ , சமந்தாவின் ஃபிளாஷ்பேக் காட்சிகளோ , வில்லன் காட்சிகளோ பெரியளவில் சுவாரஸ்ய்மாக எழுதப்படாத காரணத்தினால் இயக்குநர் உத்தேசித்த அந்த டென்ஷன் பார்வையாளர்களிடம் உருவாகவில்லை. சிட்டெடல் தொடர் ஆகட்டும் , இந்த படமாகட்டும் ஆக்‌ஷன் காட்சிகளில் சமந்தா சிறப்பாக தோற்றமளிக்கிறார். ஆனால் அதே நேரம் மற்ற காட்சிகளில் அவரது நடிப்பில் மிகைப்படுத்தபட்ட நடிப்பு வெளிப்படுவதை கவனிக்க முடிகிறது. படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இருந்து முழுக்க முழுக்க சமந்தாவின் கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து படம் நகர்கிறது. வில்லனாக வரும் குல்ஷன் தேவையா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரது கதாபாத்திர அமைப்பு சுமார் தான். 

Continues below advertisement

ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தாலும் எமோஷனுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த காட்சிகள் எழுதப்பட்ட விதம் காரணமாகவும் , நம்பகத்தன்மை காரணமாகவும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குடும்பத்துடன் ஒரு முறை பார்ப்பதற்கு ஏற்ற படம் எங்கள் தங்கம் .