நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தனது செல்ல நாய்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளார். 


நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்களாக தம்பதிகளாக இணைந்து வாழ்ந்த அவர்கள் திடீரென விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் விவாகரத்து மனுத்தாக்கல் செய்துள்ளனர். 


இதனிடையே அவர்கள் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் பரவி வந்தன. இந்த விவாகரத்து தெலுங்கு படவுலகில் மட்டுமின்றி இந்திய அளவில் அவர்களின் ரசிகர்களை மிகுந்த வருத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றும் அதையொட்டி பலமுறை அபார்ஷன் செய்ததாகவும் அவருக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு உள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் பரவின. 




இதைத்தொடர்ந்து நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில் தான் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தன்னுடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று மனம் திறந்திருந்தார். இந்த சமயத்தில்தான் சமீபத்தில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுளளார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடித்துவந்த கேரக்டர்கள் நாக சைத்தன்யாவை மட்டுமின்றி நாகார்ஜூனா உள்ளிட்ட குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிகிறது.




இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 






அந்த புகைபடம் ஒன்றில் சமந்தா தனது செல்ல நாய்க்குட்டிகளான ஹேஷ் மற்றும் சாஷாவுடன் பொழுதை கழிக்கிறார். அதில் ஒரு நாய்க்குட்டியை தனது மடியில் வைத்து தடவி கொடுக்கிறார். மற்றொரு நாய் போட்டோவுக்கு முறைத்து பார்த்து போஸ் கொடுக்கிறது. 


மற்றொரு புகைப்படத்தில் நாயை கட்டிப்பிடித்து சமந்தா படுத்திருக்கிறார். அவர் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் அவரும் நாயும் கிறிஸ்துமஸ் பாடலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். சமந்தா நாக சைதன்யாவை பிரிந்த பிறகு தனது முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மரம் இருப்பதையும் சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.