சமந்தாவும், தானும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை என்று நடிகர் நாக சைதன்யா கூறியுள்ளார். தனக்கு இரண்டாவது திருமண நடைபெற உள்ளதாக செய்தி வெளியான நிலையில் நாக சைதன்யா பதிலளித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் கவர்ச்சியான மற்றும் திறமையான நடிகைகளில் ஒருவரானவர் சமந்தா. இவர், இப்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேநேரத்தில் ஹாலிவுட்டின் கதவுகளையும் தட்டுகிறார். தனிப்பட்ட முறையில் அவரும் அவரது நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். அதன்பிறகு இரு பிரபலங்களும் திரையுலக வாழ்க்கையில் பிஸியாக உள்ளனர்.
இந்த நிலையில், நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அவரது தந்தை நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தினர் வருங்கால மருமகளை எதிர்பார்த்து வருவதாகவும் டோலிவுட் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இந்த முறை நடிகர் தனது வருங்கால மனைவி திரையுலகில் இருந்து வரக்கூடாது என்று வலியுறுத்தினார் என்று கூறப்பட்டது.
நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்திகள் பற்றி தெலுங்கு ஊடகங்களுக்கு நாக சைதன்யாவின் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமந்தா, நாக சைதன்யா இடையேயான விவாகரத்து நீதிமன்றத்தில் இன்னும் முடியவில்லை. எனவே மறுமணம் செய்வது இப்போது அவரின் மனதில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் தொடர்பான செய்தி வெளியான பிறகு சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தவிர்த்து செல்லும் என்னுடைய அறியாமையை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னுடைய அமைதி அதை ஏற்றுக்கொள்கிறது. என்னுடைய கருணை பலவீனம். ஆனால் அந்த கருணைக்கும் காலாவதி தேதி உண்டு.” என்று பதிவிட்டிருந்தார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா தனது முதல் தெலுங்கு, தமிழ் என இருமொழி படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்