நடிகை சமந்தா தன் 16 வயது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாகியுள்ளார்.


கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் கலக்கி வரு நடிகை சமந்தா நடிப்பில் சென்ற வாரம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சாகுந்தலம் திரைப்படம், வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. 


சமந்தாவின் கரியர் முடிந்துவிட்டது என முன்னதாக டோலிவுட் தயாரிப்பாளர் சிட்டி பாபு தெரிவித்த நிலையில், அதற்கு கடுமையான பதிலடி கொடுத்ததுடன் தொடர்ந்து தன் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் சமந்தா.


சாகுந்தலம், யசோதா படங்களின் வெளியீட்டின்போது சமந்தா கண் கலங்கி பேசிய நிலையில், அழுது படத்தை வெற்றி பெற வைக்க சமந்தா முயற்சிக்கிறார் என்றும் எல்லா நேரங்களிலும் சென்டிமென்ட் வேலை செய்யாது என்றும் இயக்குநர் சிட்டிபாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு முன்னதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட சமந்தா, “உங்களுக்கு வேலை செய்ய மட்டுமே உரிமை உண்டு. ஆனால் அதன் பலனைப் பெற இல்லை. ஒரு செயலின் பலன்கள் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டாம், உங்கள் நோக்கம் செயலற்றதாக இருக்க வேண்டாம்” என சமந்தா பகவத் கீதையைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். மேலும் வயதானால் காதுகளில் எப்படி முடி வளரும் என்று கூகுள் செய்யும் புகைப்படத்தையும் சமந்தா பகிர்ந்திருந்தார்.


சமந்தா - சிட்டிபாபு இடையேயான இந்த மறைமுகத் தாக்குதல் டோலிவுட் வட்டாரத்தில் முன்னதாக பேசுபொருளானது. இந்நிலையில் வருண் தவானுடன் நடித்து வரும் சீட்டடெல் தொடருக்காக முன்னதாக லண்டன் பறந்து அங்கு நடைபெற்ற இந்த சீரிஸின் ப்ரீமியர் நிகழ்வில் கலந்துகொண்டு இணையவாசிகளின் இதயங்களை வென்றார். பிரியங்கா சோப்ரா நடித்துள்ள் கதாபாத்திரத்தின் இந்தி பதிப்பில் தற்போது சமந்தா நடித்துள்ளார்.


தொடர்ந்து தற்போது தன் 16 வயது புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தா பகிர்ந்து நெட்டிசன்களின் உள்ளங்களை சமந்தா மீண்டும் கொள்ளை கொண்டுள்ளார்.




தான் 16 வயதில் எடுத்துக் கொண்ட கருப்பு வெள்ளை புகைப்படத்தை சமந்தா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்தப் புகைப்படம் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 ஃபேமிலி மேன் தொடரில் ஏற்கெனவே தான் இணைந்து நடித்த ராஜ் அண்ட் டிகேவுடன் தற்போது சீட்டடெல் தொடருக்காக தற்போது சமந்தா மீண்டும் இணைந்துள்ளார். சீட்டடெல் தவிர சமந்தா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி எனும் தெலுங்கு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.  


மேலும் படிக்க: Ayalaan Glimpse: பறக்கும் தட்டில் இருந்து இறங்கிவரும் சிவகார்த்திகேயனின் ஏலியன் நண்பர்... மாஸ் காட்டும் அயலான் க்ளிம்ப்ஸ் வீடியோ!