தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முதன்மையான நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவுடன் இணைந்து நடித்துள்ளார் சமந்தா. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. நகைச்சுவை கலந்த முக்கோண்ட காதல் கதையை கையில் எடுத்திருக்கும் விக்னேஷ் சிவன், படம் குறித்த அறிவிப்பை அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ‘டு டு டு ‘ பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகிறது. படம் வருகுற பிப்ரவரி 14 , காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.




ஃபேமிலிமேன் வெ சீரிஸிற்கு பிறகு சமந்தா திரைப்படங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுப்பதாக கூறப்பட்டது.முன்னதாக கமிட்டான படங்களை தவிர புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருந்தார் . இந்நிலையில் மீண்டும் புதிய படங்களில் நடிக்க கதை கேட்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறாராம். அந்த வகையில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ளது. படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு - எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, சாந்தரூபன் என்னும் அறிமுக இயக்குநர்  இயக்கவுள்ளார். படம் தமிழ் , தெலுங்கு என இருமொழிகளிலும்  பை- லிங்குவலாக உருவாகவுள்ளது. படம் முழுக்க முழுக்க பெண்ணுக்கு முக்கியத்துவமளிக்கும் கதையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை எதிர் பார்க்கலாம் .






சமந்தா , தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் , சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், நாக சைத்தன்யாவை விட சமந்தா அதீத சர்ச்சைகளுக்குக்கும் வதந்திகளுக்கும் ஆளானார். சமூக வலைத்தளங்களில் இவர் குறித்து வந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார் சமந்தா, தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா , அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியிருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.