நடிகை சமந்தா:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. விஜய்யுடன் இணைந்து கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட 3 படங்களில் நடித்துள்ள இவர், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா, போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டுள்ளார். கடைசியாக தமிழில் சமந்தா நடிப்பில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வெளியானது. அதன் பிறகு தெலுங்கில் யஷோதா, சகுந்தலம், குஷி, ஆகிய படங்கள் வெளியாகின.
நாக சைதன்யாவுடன் விவாகரத்து:
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை 6 வருடங்கள் காதலித்து கரம் பிடித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இருவருமே திரையுலகம் மெச்சும் ஜோடியாக வாழ்ந்து வந்த நிலையில், திடீர் என நான்கே ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிவதை உறுதி செய்தனர். சமந்தாவின் முடிவை அவருடைய பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அவருக்கு ஆதரவாக இருந்தனர்.
சமந்தா தந்தை ஜோசப் பிரபு மரணம்:
சமந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் தான். இந்நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இதை சமந்தா 'மீண்டும் சந்திக்கும் வரை அப்பா' என்று உடைந்த இதயத்தோடு போஸ்ட் செய்திருந்தார். ஜோசப் பிரபு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சமந்தாவின் தந்தை ஒரு தெலுங்கு ஆங்கிலோ-இந்தியர். இவருடைய தாய் ஒரு மலையாளி. சமந்தாவின் வளர்ச்சியில் அம்மா - அப்பா என இருவருமே முக்கிய பங்கு வகித்துள்ளார். பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய தந்தை பற்றி சமந்தா குறிப்பிட்டு கூறி உள்ளார்.
சமந்தா எமோஷ்னல் பகிர்வு:
அப்போது எல்லா பெற்றோர்களைப் போலவே தான் என்னுடைய அப்பாவும் என்னை நம்பினார். அடிக்கடி என்னை புத்திச்சாலி இல்லை என்று கூறுவார். அவர் அப்படி சொன்னதால் நானும் அப்படியே நம்பினேன் என்று கூறியிருக்கிறார். தன்னுடைய திருமண முறிவையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் என்னுடைய உணர்ச்சிகளை மதித்தார் என கூறியிருந்தார். சமந்தா தந்தையின் இறுதி சடங்குகள் சென்னையில் தான் நடக்கும் என்பதால், சமந்தா சென்னை விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.