’யசோதா’ படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகம், காட்சிகள் சிலிர்ப்பூட்டுபவையாக இருக்கக்கூடும், இப்படம் பெரிய திரையில் பார்த்து ரசிக்க வேண்டிய அனுபவம் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள யசோதா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர்கள் ஹரி - ஹரிஷ் இயக்கியுள்ளனர். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
நாளை வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக யசோதா படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பிங்க்வில்லா செய்தி தளத்துக்கு சமந்தா பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:
“முதன்முறையாக இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அது என்னை உறைய வைத்தது. அதனால் தான் இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பினேன்.
இந்தப் படத்தின் இயக்குநர்கள் ஹரி ஹரீஷ் இருவருடனும் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இந்தக் கதையின் மீதும் அவர்கள் சொல்ல விரும்பிய செய்தியின் மீதும் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.
எது இவர்களை இப்படி ஒரு கதையை சொல்லத் தூண்டியது என்பதை படத்தைப் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இதில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
யசோதா படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பிங்க்வில்லா செய்தி தளத்துக்கு சமந்தா பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
“முதன்முறையாக இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது அது என்னை உறைய வைத்தது. அதனால் தான் இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பினேன்.
இந்தப் படத்தின் இயக்குநர்கள் ஹரி ஹரீஷ் இருவருடனும் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இந்தக் கதையின் மீதும் அவர்கள் சொல்ல விரும்பிய செய்தியின் மீதும் மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்.
எது இவர்களை இப்படி ஒரு கதையை சொல்லத் தூண்டியது என்பதை படத்தைப் பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இதில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகம், காட்சிகள் சிலிர்ப்பூட்டுபவையாக இருக்கக்கூடும். இது நிச்சயம் பெரிய திரையில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்” எனத் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ரசிகர்களின் பார்வை பெருமளவு மாறிவிட்டது என்ற உண்மையை நாம் நிச்சயம் மறுக்க முடியாது. ஓடிடிக்கு பழகிவிட்டதால், திரையரங்குக்கு பார்வையாளர்களை அழைத்து வருவது கடினமாகிவிட்டது. இதனால் நாங்கள் கதைகளை மறு பரிசீலனை செய்யவும், மீண்டும் யோசித்து எழுதவும் வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்தப் படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகம், காட்சிகள் சிலிர்ப்பூட்டுபவையாக இருக்கக்கூடும். இது நிச்சயம் பெரிய திரையில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்” எனத் தெரிவித்துள்ளார்.